கம்பராமாயணம் 9171 · யுத்த 27.4
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
நெடிய மால் படை நிலம் செய்து விசும்பும் செய்து, நின்றானை - யான் எய்த நெடிய திருமாலின் படை நிலம் முழுதும் பரவியதோடு விண் முழுதும் பரவி என் எதிர் நின்ற இலக்குவனை; வலம் செய்து போயிற்று என்றால் மற்று இனி வலியது உண்டோ? - வலம் செய்து கொண்டு (அவனை ஒன்றும் செய்யாது) போவது என்றால், அப்படையினும் வலியதொரு படை நம்மிடம் உளதோ? குலம் செய்த பாவத்தாலே கொடும் பகை தேடிக்கொண்டாய் - நம் அரக்கர் குலம் செய்த பாவத்தினாலே நீ கொடுமையான பகையைத் தேடிக்கொண்டாய்; இலக்குவன் சலம் செயின் தானே உலகம் மூன்றும் முடிப்பன் - இலக்குவன் வெகுள்வானாயின் அவன் ஒருவனே உலகம் மூன்றையும் அழிப்பான்.
“கெட்ட பின்பு ஞானி” என்னுமாப் போலே, முன்பு இராவணன் மந்திராலோசனை முதலானவற்றுள் இராம இலக்குவரை அற்பமாகக் கொண்டு பேசிய இறுமாப்புடைய வீரனான இந்திரசித்து போர்க்களத்தில் தனது தவபலம், உடற்பலம், எல்லாவற்றிற்கும் மேலாகத் தனது தெய்வப் படைகளின் பலம் ஆகியவை பொய்த்துப் போனமையினால் உண்மை நிலை தெளியப் பெற்றுப் பேசும் பேச்சாமிது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'If the great weapon of Tirumāl, filling the earth and filling the sky,
- circled to the right around the one who stood there and went away, is there anything stronger left?
- Through the sin our clan has committed you have brought on yourself a cruel enmity;
- if Ilakkuvaṉ grows angry, he alone will finish all three worlds.'
What the poem says
Intiracittu describes the most telling moment of all. Tirumāl's own weapon, which filled earth and sky, merely circled Ilakkuvaṉ in reverence and went away. What weapon could be stronger than that?
He tells his father bluntly that the sins of their race have brought this deadly enmity upon him, and that Ilakkuvaṉ alone, if roused, could destroy the three worlds. The commentary notes the proverb about becoming wise after ruin: the proud prince who once scorned the two brothers now sees the truth because all his powers have failed him.