கம்பராமாயணம் 9174 · யுத்த 27.7

Section யுத்த காண்டம் / 27. இந்திரசித்து வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

இயம்பலும் இலங்கை வேந்தன் - (என்று இந்திரசித்து) கூறிய அளவில் இலங்கை வேந்தனாகிய இராவணன் எயிற்று இள நிலவு தோன்ற புயங்களும் குலுங்கநக்கு - தன் கோரப் பற்களில் இள நிலவு தோன்றுமாறும், இருபது தோள்களும் குலுங்குமாறும் சிரித்து; ஐய! போர்க்கு இனி ஒழிதி போலாம்? - ஐயனே! போருக்குச் செல்லாமல் இனி நீங்குகின்றாய் போலும்? மயங்கினை, மனிசன் தன்னை அஞ்சினை, வருந்தல் - மனம் கலங்கியவனே! மனிசனைக் கண்டு அஞ்சி வருந்தாதே! இன்றே தனு ஒன்றாலே மனிசரைச் சயம் கொடு தருவேன் - இன்றைக்கே என் ஒரு வில்லாலே மனிதரை வெற்றி கொண்டு தருவேன்!

ஒரு சிறந்த வீரன் தான் உணர்ந்த உண்மையை சிரத்தையோடு சொல்லும்போது அதைக் கேட்பவன் ஏளனமாகச் சிரிப்பதும், அவனுடைய தன்மானத்திற்கு இழுக்காகப் பேசுதலும் அவன் உள்ளத்தைப் புண்படுத்துவதாகும். இராவணன் வேண்டுமென்றே கும்பகர்ணனிடத்தும், இங்கு இந்திரசித்தனிடத்தும் அவ்விதம் நடந்து கொள்ளுதலைக் காணலாம். அதற்குக் காரணம் ஒரு வீரன் எவ்விடத்தும், எவ்விதத்தும் மனத் தளர்ச்சி உடையனாதல் கூடாது என்பதாம். முதல் நாள்போர் முடிவிலேயே “நாசம் வந்துற்ற போதும் நல்லதோர் பகையைப் பெற்றேன்” என ஒரு முடிவுக்கு வந்து விட்ட இராவணனுக்கு இவர்கள் கூறுவதெல்லாம் தெரியாதவை அல்ல. இந்தப் பின்னணி இனி வரும் இராவணன் பேச்சைப் புரிந்து கொள்ள உதவும்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. As he spoke, the king of Ilaṅkai, the young moonlight of his tusks showing,
  2. laughed so that his arms shook: 'So you are done with war from now on!
  3. You are bewildered; you fear a man; do not grieve, sir!
  4. This very day, with one bow, I will win the victory over these men and give it to you.'

What the poem says

Irāvaṇaṉ laughs at his son's advice, so heartily that his twenty arms shake and his teeth gleam like young moonlight. He mocks Intiracittu for wanting to give up the fight and for fearing a mere man, and promises to defeat the humans himself that same day with a single bow.

The commentary observes that Irāvaṇaṉ deliberately answers serious advice with scorn, as he did earlier with Kumpakaruṇaṉ. A warrior must never show weakness, and Irāvaṇaṉ had long ago resolved that even if ruin came, he had at least found a worthy enemy.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1iyampalum ilaṅkai vēntaṉ eyiṟṟu iḷa nilavu tōṉṟa,
puyaṅkaḷum kuluṅka nakku, 'pōrkku iṉi oḻiti pōlām!
mayaṅkiṉai; maṉicaṉtaṉṉai añciṉai varuntal; aiya!
cayam koṭu taruveṉ, iṉṟē, maṉicarait taṉu oṉṟālē.