கம்பராமாயணம் 9176 · யுத்த 27.9

Section யுத்த காண்டம் / 27. இந்திரசித்து வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1'பேதைமை உரைத்தாய்; பிள்ளாய்! உலகு எலாம் பெயரப், பேராக்
காதை என் புகழினோடு ' நிலைபெற, அமரர் காண,
மீது எழும் மொக்குள் அன்ன யாக்கையை விடுவது அல்லால்,
சீதையை விடுவது உண்டோ, இருபது திண்தோள் உண்டாய்?

பொருள் · Meaning in Tamil

பிள்ளாய்! பேதைமை உரைத்தாய் - பிள்ளாய்! அறிவோடு பொருந்தாத சொற்களைச் சொன்னாய்; உலகு எலாம் பெயர பேராக்காதை என்புகழினோடு நிலைபெற - உலகங்கள் எல்லாம் நிலை பெயரவும் அழியாத கதை எனது புகழினோடு நிலை பெறுமாறும்; அமரர் காண மீது எழும் மொக்குள் அன்ன யாக்கையை விடுவது அல்லால் - அதனைத் தேவர்கள் காணுமாறும், நீர்மேல் எழுகின்ற குமிழி போன்ற நிலையில்லாத உடம்பை விடுவது அல்லது; இருபது திண் தோள் உண்டால் சீதையை விடுவது உண்டோ? - இருபது திண்ணிய தோள்கள் எனக்கு இருக்கச் சீதையை விடுவதும் உண்டோ?

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'You have spoken folly, child! So that, even when all the worlds pass away, a tale that never passes
  2. may endure along with my fame, while the gods look on,
  3. I may give up this body, which is like a bubble rising on water;
  4. but give up Cītai, while I still have twenty strong arms?'

What the poem says

Irāvaṇaṉ dismisses his son's plea as foolishness. The body is no more lasting than a bubble on water, and he is ready to give it up, so that the story of his glory may live on even after the worlds themselves have passed away.

But as long as he has his twenty mighty arms, he will never give up Cītai.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'pētaimai uraittāy; piḷḷāy! ulaku elām peyarap, pērāk
kātai eṉ pukaḻiṉōṭu' nilaipeṟa, amarar kāṇa,
mītu eḻum mokkuḷ aṉṉa yākkaiyai viṭuvatu allāl,
cītaiyai viṭuvatu uṇṭō, irupatu tiṇ tōḷ uṇṭāl?