கம்பராமாயணம் 9177 · யுத்த 27.10
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
வென்றிலன் என்ற போதும் - யான் வெற்றி பெறவில்லையாயினும்; மற்று அவ் இராமன் பேர் நிற்கும் ஆயின் - (வெற்றி பெற்ற) அந்த இராமன் பேர் நிற்குமாயின்; யானும் வேதம் உள்ளளவும் நின்றுளன் அன்றோ - (அவனால்) வெல்லப் பெற்ற) யானும் வேதம் இருக்கின்ற காலம் வரையில் நிலைபெற்றுள்ளேன் அன்றோ? பொன்றுதல் ஒரு காலத்தும் தவிருமோ? பொதுமைத்து அன்றோ - இறத்தல் என்பது ஒரு காலத்தும் தவிரக் கூடியதோ? அது எவ்வுயிர்க்கும் பொதுவானது அன்றோ? இன்றுளார் நாளை மாள்வர்; புகழுக்கும் இறுதி உண்டோ? - இன்று இருப்பவர்கள் நாளைக்கு இறப்பார்கள்; ஆனால் புகழுக்கும் அத்தகைய இறுதி உளதாமோ?
இராமன் பரம் பொருளானால் அப்பரமே இராவணனை வெல்வதற்கு மண்ணில் பிறப்பெடுத்து வென்றதெனில்; அதற்காக அதன் பெயர் வேதமுள்ளவும் நிற்குமாயின், அதனோடு சேர்ந்து என் பெயரும் நிற்குமன்றோ என்கின்றான். இறுதி இரண்டடிகள் அற்புதமானவை. “இன்றுளேன் நாளையில்லேன் என் செய்வான் தோன்றினேனே” (அப்பர் தே.வா 4:78:1) என்பதனையும், “ஒன்றா வுலகத் துயர்ந்த புகழல்லாற் பொன்றாது நிற்பதொன்றில்” (233) என்ற குறளினையும் இதனோடு ஒத்துக் காண்க. “மன்னா உலகத்து மன்னுதல் குறித்தோர் தம் புகழ் நிறீஇத் தாம் மாய்ந்தனரே” என்ற புறப்பாடல் அடியும் இங்கு நினைக்கத்தகும். “இன்றைக்கிருப்பாரை நாளைக்கிருப்பர் என்று எண்ணவோ திடமில்லை” என்பார் தாயுமான அடிகள்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'Even if I do not win, as long as the Vedas last, will not I too
- endure, if the name of that Irāmaṉ endures?
- Can death be avoided at any time? Is it not common to all?
- Those who live today will die tomorrow; but is there any end to fame?'
What the poem says
Irāvaṇaṉ reasons that even defeat will bring him lasting fame. If Irāmaṉ's name lives as long as the Vedas, then the name of the enemy he came to earth to conquer will live just as long beside it.
Death comes to everyone sooner or later, but fame does not die. The commentary admires the last two lines and compares sayings of Appar, Tiruvaḷḷuvar, the Puṟanāṉūṟu and Tāyumāṉavar on the shortness of life and the endurance of fame.