கம்பராமாயணம் 9180 · யுத்த 27.13
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
எழுந்தவன் தன்னை நோக்கி இணை அடி இறைஞ்சி - அவ்வாறு போர்க்கு எழுந்த இராவணனைப் பார்த்து அவனுடைய இரண்டு அடிகளையும் வணங்கி; “எந்தாய்! சீற்றம் ஒழிந்தருள், சொன்ன உறுதியைப் பொறுத்தி - “என் தந்தையே! கோபத்தை விடுவாயாக! யான் சொன்ன உறுதிச்சொற்களைப் பற்றி என்மேல் வெகுளாது பொறுத்துக் கொள்வாயாக; யான் போய்க் கழிந்தனென் என்ற பின்னர் “நல்லவா காண்டி” என்னா - யான் போர்க்குச் சென்று இறந்தேன் என்று கேள்விப்பட்ட பின்பு என் சொற்களை 'நல்லனவாகக் காணுவாய்' என்று கூறிவிட்டு; மொழிந்து, தன் தெய்வத் தேர் மேல் முடியலுற்றான் ஏறினான் - தனது தெய்வத்தன்மையுடைய தேரின்மேல் இறக்கும் உறுதி கொண்டவனாய் ஏறினான் (இந்திரசித்து).
ஆங்கிலம் · English translationAI
Translation
- Looking at him who had risen, he bowed at his two feet: 'My father!
- Put away your anger; forgive the counsel I gave; after you hear
- that I have gone and perished, you will see that it was good,'
- he said, and mounted his divine chariot, resolved to die.
What the poem says
Intiracittu understands his father's meaning. He bows at Irāvaṇaṉ's feet and asks him to set aside his anger and forgive the advice he gave.
When word comes that his son has died, he says, Irāvaṇaṉ will see that the advice was sound. Then he mounts his divine chariot, having already accepted that he is going to his death.