கம்பராமாயணம் 9182 · யுத்த 27.15
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
இலங்கையின் நிருதர் எல்லாம் எழுந்தனர் விரைவின் எய்தி - இலங்கையிலுள்ள அரக்கர் எல்லோரும் எழுந்து விரைவுடன் (இந்திரசித்தன் அத்தேரை அடைந்து; விலங்கல் அம்தோளாய்! நின்னைப் பிரிகலம் விளிதும் என்று - மலை போன்ற அழகிய தோள்களை உடையவனே! உன்னை யாங்கள் பிரியமாட்டோம். (இறப்பதாயின் உன்னுடனே இறப்போம் என்று கூறியவராய்; வலங்கொடு தொடர்ந்தார் தம்மை - வலமாகத் தன்னைத் தொடர்ந்து வருபவரை (இந்திரசித்து); மன்னனைக் காமின், யாதும் கலங்கலிர் - அரசனைக் காப்பாற்றுங்கள் சிறிதும் கலக்கம் அடையாதீர்கள்; இன்றே சென்று, மனிசரைக் கடப்பென் என்றான் - நான் இப்பொழுதே சென்று மனிதர்களை வெல்வேன்” என்று கூறினான்.
'மன்னனைக்காமின்' என்றதனால் மன்னனுக்கு ஆபத்து என்பதும் 'யாதும் கலங்கலிர்' என்றதனால், அனைவரும் கலக்கமடைந்துள்ளன ரென்பதும் பெறப்பட்டது. “மனிசரைக் கடப்பென்” என்பவன் பின் ஏன் மன்னனைக் காமின் என்றான்? தன் வீழ்ச்சி தவிர்க்க முடியாததும், உறுதியானதுமென இந்திரசித்து நினைத்ததினால் என்க.
ஆங்கிலம் · English translationAI
Translation
- All the Rākṣasas of Ilaṅkai rose and came quickly, saying,
- 'You with fine shoulders like mountains! We will not leave you; we will die with you,'
- and to those who followed, keeping him on their right, he said, 'Guard the king; do not be
- troubled at all; today I will go and overcome these men.'
What the poem says
The Rākṣasas of Ilaṅkai rush to Intiracittu's chariot, vowing to follow him and die with him. They walk around him keeping him on their right, as a mark of respect.
He tells them to stay behind and guard the king, and not to worry, for he will defeat the humans that very day. The commentary notes the contradiction: if he is sure of victory, why ask them to protect the king? It is because he knows his own death is now certain.