கம்பராமாயணம் 9191 · யுத்த 27.24
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
ஆயிடை இளையவன் விடம் அனையான் அவன் இடு கவசமும் - (அனுமன் மேல் இந்திரசித்து அம்புகளை எய்த) அப்போது இளையவனாகிய இலக்குவன் நஞ்சு போன்றவனாகிய இந்திரசித்தன் அணிந்திருந்த கவசமும்; அழிவுபட அயில்முக விசிகம் தூயினன் - அழியுமாறு கூரிய முனையினை உடைய அம்புகளைத் தூவினான்; நெடுந் தொளைபட விழி கனல் சொரிய முனிந்து - அந்த அம்புகளால் தன் உடம்பில் நெடிய தொளை உண்டாகப் பொறாது கண்களில் தீப்பொறி சிந்த வெகுண்டு; ஏயின நிருதனது எரிகணை தான் இடன் இலபடுவன இடை இடை வந்து ஓய்வுறுவன - ஏவிய அரக்கனது எரிகின்ற அம்புகள் குறிப்பிட்ட விடத்திலன்றி வேறிடத்தில் படுவனவும், இடையிடையே வந்து ஓய்வுறுவனவும் ஆயின; அது தெரிவுறலால் இமையவர் உவகையினால் உரறினர் - அச்செயலைத் தேவர் தெரிந்து கொண்டதால் மகிழ்ச்சி மிக்கு ஆரவாரித்தனர்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Then the younger prince, so that even the armour worn by that poison-like one was destroyed,
- showered sharp-pointed arrows; as deep holes opened, he raged with fire pouring from his eyes,
- and the burning arrows the Rākṣasa sent struck where they found no place, or came halfway
- and fell spent; seeing this, the gods shouted with joy.
What the poem says
Ilakkuvaṉ showers arrows that wreck the armour of Intiracittu, who is as deadly as poison, and bore deep holes in his body.
Intiracittu's eyes blaze with fury, but his aim is failing. His fiery arrows hit the wrong places or lose their force halfway, and the gods, noticing this, shout for joy.