கம்பராமாயணம் 9192 · யுத்த 27.25
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
வில்லினின் வலிதரல் அரிது எனலால் - வில்லினால் இலக்குவனை வெல்லுதல் அரிது என (இந்திர சித்து) எண்ணியதால்; வெயிலினும் அனல் உமிழ் அயில் “விரைவில் செல்” என - சூரியனைக் காட்டிலும் வெப்பமான கனலை உமிழ்கின்ற வேலினை எடுத்து விரைவில் செல்வாயாக என; மிடல் கொடு கடவினன் மற்று அது திசைமுகன் மகன் உதவியதால் - வலிமை கொண்டு செலுத்தினான். அவ்வேல் பிரமன் மகன் கொடுத்ததாம்; எல்லினும் வெளிபட எதிர்வது கண்டு இளையவன் - பகற்பொழுதினும் விளக்கம் உண்டாகத் தன்னை எதிர்த்து வருவதைக் கண்டு இலக்குவன்; எழுவகை முனிவர்கள்தம் சொல்லினும் வலியது ஓர் சுடு கணையால் - எழு முனிவர்களின் சாபச் சொல்லினும் வலியதாகிய ஒரு சுடும் இயல்புடைய அம்பினால்; நடு இரு துணிபட உரறினனால் - நடுவே அது இரண்டு துண்டாக எய்துவிட்டு மகிழ்ச்சியினால் ஆரவாரித்தான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Thinking, 'It is hard to win by the bow,' he took a spear that spewed fire hotter than sunlight,
- and saying, 'Go swiftly,' hurled it with all his might; it had been given him by the son of the four-faced one;
- seeing it come on, brighter than daylight, the younger prince,
- with a scorching arrow stronger than the curse of the seven sages, cut it in two through the middle and roared.
What the poem says
Realising that he cannot win with the bow, Intiracittu hurls a spear that blazes hotter than the sun. It was a gift from a son of Piramaṉ, the four-faced creator.
As it comes on, brighter than daylight, Ilakkuvaṉ splits it in half with one burning arrow. The arrow is said to be more powerful than a curse spoken by the seven great sages, which nothing can turn aside, and Ilakkuvaṉ roars in triumph.