கம்பராமாயணம் 9193 · யுத்த 27.26

Section யுத்த காண்டம் / 27. இந்திரசித்து வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1ஆணியின் நிலை என விசிகம் நுழைந்து ஆயிரம் உடல்புக, அழிபடு செஞ்
சோணிதம் நிலம் உற உலறிடவும், தொடுகணை விடுவன மிடல்கெழு திண்
பாணிகள் கடுகின முடுகிடலும், பகலவன் மருமகன், அடுகணைவன்
தூணியை உரும் உறழ் பகழிகளால் துணிபட, முறைமுறை சிதறினனால்.

பொருள் · Meaning in Tamil

ஆயிரம் விசிகம் ஆணியின் நிலையன உடல் புக - இலக்குவன் விடுத்த ஆயிரம் அம்புகள் ஆணிகள் போலத் தைத்து இந்திரசித்தின் உடம்பில் புகுதலால்; அழிபடு செஞ் சோணிதம் நிலம் உற, உலறிடவும் - அங்கிருந்து பெருகுகின்ற சிவந்த இரத்தம் நிலத்தில் விழ உடம்பு இரத்தம் இல்லாமல் வற்றவும் (சோராது); தொடுகணை விடுவன மிடல் கெழுதிண் பாணிகள் கடுகின முடுகிடலும் - வில்லில் தொடுக்கின்ற அம்புகளை விடுவனவாகிய வலிமை பொருந்திய திண்ணிய கைகள் அம்புகளை அம்பறாத் தூணியிலிருந்து எடுக்க மிகவும் விரைந்து சென்ற அளவில்; பகலவன் மருமகன் அடுகணை வன் தூணியை - சூரிய குலத்தோன்றலான இலக்குவன், கொல்லுங்கணைகள் நிறைந்த வலிய அம்பறாத் தூணியை; உரும்உறழ் பகழிகளால் துணிபட முறை முறை சிதறினனால் - இடியையொத்த வலிய அம்புகளால் துணிபடுமாறு முறை முறையே எய்தான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. As a thousand arrows went into his body and stood fast like nails, and his red blood
  2. poured out onto the ground until he was drained dry, still his strong, mighty hands
  3. that fitted and loosed arrows went darting quickly to the quiver; then the scion of the Sun,
  4. with arrows like thunder, shot volley after volley until he cut his strong quiver full of killing shafts to pieces.

What the poem says

A thousand of Ilakkuvaṉ's arrows are now driven into Intiracittu like nails. His blood pours onto the ground until his body is almost drained, but he does not give up, and his strong hands keep reaching swiftly for fresh arrows.

So Ilakkuvaṉ, descendant of the Sun, aims volley after volley of thunderbolt arrows at Intiracittu's quiver and smashes it, cutting off his supply.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1āṇiyiṉ nilaiyaṉa vicikam nuḻaintu āyiram uṭal puka, aḻipaṭu ceñ
cōṇitam nilam uṟa ulaṟiṭavum, toṭu kaṇai viṭuvaṉa miṭal keḻu tiṇ
pāṇikaḷ kaṭukiṉa muṭukiṭalum, pakalavaṉ marumakaṉ, aṭu kaṇai vaṉ
tūṇiyai urum uṟaḻ pakaḻikaḷāl tuṇipaṭa, muṟai muṟai citaṟiṉaṉāl.