கம்பராமாயணம் 9195 · யுத்த 27.28

Section யுத்த காண்டம் / 27. இந்திரசித்து வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1உய்வினை ஒருவன் தூண்டாது உலத்தலின், தவத்தை நண்ணி,
அய்வினை நலிய நைவான் அறிவிற்கும் உவமை ஆகி,
மெய்வினை அமைந்த காமம் விற்கின்ற விரகில் தோலாப்
பொய்வினை மகளிர் கற்பும் போன்றது அப் பொலம் பொன் திண்தேர்.

பொருள் · Meaning in Tamil

உய்வினை ஒருவன் தூண்டாது உலத்தலின் அப்பொலம் பொன்திண் தேர் - தேரைச் செலுத்துகின்ற வினையை மேற்கொண்ட ஒப்பற்ற பாகன் (குதிரையைத் தூண்டாமல் பகைவர் கையில்) இறந்து பட்டதனால் அந்தப் பொன் மயமான அழகிய தேர்; தவத்தை நண்ணி அய்வினை நலிய நைவான் அறிவிற்கும் உவமை ஆக - தவவேடத்தை மேற்கொண்டும் (அவ்வேடத்திற்குப் பகையாய்) ஐம்பொறிகளின் செயல் தன்னை வருத்த வருந்துகின்றவனது (அழிவுற்ற) ஞானத்திற்கும் உவமையாகப் பொருந்தி; மெய்வினை அமைந்த காமம் விற்கின்ற விரகன் தோலாப் - (உள்ளம் ஒன்றாது) உடம்பின் செயலாக மட்டும் அமைந்த காமநுகர்ச்சியை வேண்டுவார்க்கு விலை பெற்று விற்கின்ற தந்திரத்தில் தோல்வியுறாமல்; பொய்வினை மகளிர் கற்பும் போன்றது - தேர்ச்சி பெற்ற பொய்யான செயல்களைச் செய்கின்ற வேசியரின் அழிவுற்ற கற்பொழுக்கமும் போன்றது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Because the one who drove it no longer urged it on and was dead,
  2. that splendid, strong golden chariot became like the wisdom of one who takes up penance yet suffers as the five senses torment him,
  3. and like the chastity of false women, never beaten in the craft
  4. of selling desire that is only an act of the body.

What the poem says

The metre changes again. With its driver dead, the magnificent golden chariot is aimless and useless.

The poet gives two pointed comparisons. It is like the wisdom of a man who has taken up the ascetic's life but is still tormented by the cravings of his five senses, wisdom that has lost its guide. It is also like the 'chastity' of courtesans who are expert in selling the merely physical act of love: something that exists in name only.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1uyviṉai oruvaṉ tūṇṭātu ulattaliṉ, tavattai naṇṇi,
ayviṉai naliya naivāṉ aṟiviṟkum uvamai āki,
mey viṉai amainta kāmam viṟkiṉṟa virakaṉ tōlāp
poy viṉai makaḷir kaṟpum pōṉṟatu appolam poṉ tiṇ tēr.