கம்பராமாயணம் 9197 · யுத்த 27.30

Section யுத்த காண்டம் / 27. இந்திரசித்து வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1வீரர் என்பார்கட்கு எல்லாம் முன்னிற்கும் வீரர் வீரன்
பேரர் என்பார்கள் ஆகும் பெற்றியிப் பெற்றித்து ஆமே?
சூரர் என்று உரைக்கற் பாலார் துஞ்சும் போது உணர்வின் சோராத்
தீரர் என்று அமரர் செப்பிச் சிந்தினார், தெய்வப் பொன் பூ.

பொருள் · Meaning in Tamil

வீரர் என்பார்கட்கு எல்லாம் முன் நிற்கும் வீரர் வீரன் - “இவன் வீரர் என்று புகழப்படுவோர்கட்கு எல்லாம் முன் நிற்பதற்குரிய வீரர் வீரன்; பேரர் என்பார்கள் ஆகும் பெற்றியின் பெற்றித்து ஆமே? - வீரத்தில் பேர் பெற்றவர்கள் ஆதற்குரிய தன்மை இத்தன்மையதே ஆகும்; சூரர் என்று உரைக்கற்பாலார் துஞ்சும் போது உணர்வின் சோராத் தீரர் - சூரர் என்று சிறப்பித்துக் கூறத்தக்கவர்கள் இறக்கும் போது வீர உணர்ச்சியில் சோர்வடையாத துணிவுடையவர் ஆவர்; என்று அமரர் செப்பி தெய்வப் பொற்பூ சிந்தினார் - என்று தேவர்கள் சொல்லிக் கொண்டு தெய்வத் தன்மை வாய்ந்த கற்பக மலர்களாகிய பொன் மலர்களைச் சொரிந்தார்கள்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'He is the hero of heroes, standing in front of all who are called heroes;
  2. is not this the very nature of those who are called great?
  3. Those fit to be called brave are the steadfast who do not flag in spirit even as they die,'
  4. said the gods, and scattered golden flowers of heaven.

What the poem says

Even the gods, who have been hoping for Intiracittu's defeat, are moved to admiration by his courage. They declare him the greatest of all heroes and the very model of what a renowned warrior should be.

True bravery, they say, is shown by those whose spirit does not fail even at the moment of death. They shower him with golden flowers from the heavenly trees.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1vīrar eṉpārkaṭku ellām muṉ niṟkum vīrar vīraṉ
pērar eṉpārkaḷ ākum peṟṟiyiṉ peṟṟittu āmē?
cūrar eṉṟu uraikkaṟpālār tuñcum pōtu uṇarviṉ cōrāt
tīrar eṉṟu amarar ceppic cintiṉār, teyvap poṟ pū.