கம்பராமாயணம் 9198 · யுத்த 27.31

Section யுத்த காண்டம் / 27. இந்திரசித்து வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1'எய்தவன் பகழி எல்லாம் பறித்து, இவன் என்மேல் எய்யும்;
கய்தடுமாறாது; உள்ளம், உயிர் இனம் கலங்காது யாக்கை
மொய்கணை கோடி கோடி மொய்க்கவும் இளைப்பு ஒன்று இல்லான்;
அய்யனும், 'இவனோடு எஞ்சும் ஆண்தொழில் ஆற்றல் 'என்றான்.

பொருள் · Meaning in Tamil

அய்யனும், எய்த வன் பகழி எல்லாம் பறித்து, இவன் என்மேல் எய்யும் - இலக்குவனும், “யான் எய்த வலிய அம்புகளையெல்லாம் பறித்து இவன் என்மேல் எய்கின்றான்; கய் தடுமாறாது உள்ளம் உயிர் இனம் கலங்கா - இவன் கைதடுமாறவில்லை, இவன் உள்ளமும் உயிரும் இன்னும் துளங்காமல் இருக்கின்றன; யாக்கை மொய்கணை கோடி கோடி மொய்க்கவும் இளைப்பு ஒன்று இல்லான் - (இவன்) உடம்பில் வலிமை வாய்ந்த அம்புகள் கோடி கோடியாக மொய்த்துத் தைக்கவும் இளைப்புச் சிறிதும் இல்லாதவனாக இருக்கின்றான்; ஆண்மைத் தொழில் ஆற்றல் இவனோடு எஞ்சும் என்றான் - (ஆதலால்) ஆண்மைத் தொழிலாகிய ஆற்றல் இவனோடு அழியும் என்று வியந்து கூறினான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'He plucks out all the strong arrows I have shot and shoots them at me;
  2. his hand does not falter; his heart and his life are not yet shaken; though crores upon crores
  3. of thick-packed arrows swarm in his body, he shows no weariness at all';
  4. and the lord too said, 'With him the power of manly deeds will come to an end.'

What the poem says

Ilakkuvaṉ too is full of admiration. Intiracittu is pulling Ilakkuvaṉ's own arrows out of his body and firing them back. His hand is steady, his spirit unbroken, and though millions of arrows have struck him, he shows no sign of tiring.

Ilakkuvaṉ declares that when this man dies, true heroism will die with him.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'eyta vaṉ pakaḻi ellām paṟittu, ivaṉ eṉmēl eyyum;
kay taṭumāṟātu; uḷḷam, uyir iṉam kalaṅkā yākkai
moy kaṇai kōṭi kōṭi moykkavum iḷaippu oṉṟu illāṉ;
ayyaṉum, 'ivaṉōṭu eñcum āṇtoḻil āṟṟal 'eṉṟāṉ.