கம்பராமாயணம் 9200 · யுத்த 27.33

Section யுத்த காண்டம் / 27. இந்திரசித்து வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1என்று எடுத்து இலங்கை வேந்தற்கு இளையவன் இயம்ப, 'இன்னே
பொன்றுவது அல்லால் அப் பால் இனி ஒரு போக்கும் உண்டோ?
சென்றுழிச் செல்லும் அன்றே தெறுகணை; வலியில் தீர்ந்தான்;
வென்றி இப்பொழுதே கோடும்; காண் 'என விளம்பும் எல்லை.

பொருள் · Meaning in Tamil

என்று எடுத்து இலங்கை வேந்தற்கு இளையவன் இயம்ப - என்று இலங்கை வேந்தனாகிய, இராவணனுக்கு இளையவனாகிய வீடணன் எடுத்துச் சொல்ல; இன்னே பொன்றுவது அல்லால் அப்பால் இனி ஒரு போக்கும் உண்டோ - (இலக்குவன்) இப்பொழுதே அவன் இறப்பது அல்லால் இனி ஒருமுறை அப்பால் போதலும் உண்டோ? தெறுகணை சென்றுழிச் செல்லும் அன்றே - அழிக்கின்ற என் அம்புகள் அவன் சென்ற இடத்திற்குச் செல்லும் அன்றோ? வலியின் தீர்ந்தான் - (அவன்) வலிமை நீங்கினான்; இப்போதே வென்றி கோடும் காண் என விளம்பும் எல்லை - இப்பொழுதே வெற்றி கொள்வோம் பார்ப்பாயாக என்று சொல்லும் அளவில்;

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. When the younger brother of the king of Ilaṅkai had set this out, he said, 'Now
  2. apart from dying here and now, is there any way left for him to get away?
  3. Will not my destroying arrows go wherever he goes? His strength is gone;
  4. we will take the victory this very moment; watch,' and even as he spoke —

What the poem says

Ilakkuvaṉ answers Vīṭaṇaṉ confidently. Intiracittu has no escape left except death. Wherever he goes, Ilakkuvaṉ's arrows will follow him, and his strength is already spent.

Ilakkuvaṉ tells Vīṭaṇaṉ to watch, for victory is coming now. The sentence breaks off here and is completed in the next verse with the sunrise.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1eṉṟu eṭuttu ilaṅkai vēntaṟku iḷaiyavaṉ iyampa, 'iṉṉē
poṉṟuvatu allāl appāl iṉi oru pōkkum uṇṭō?
ceṉṟuḻic cellum aṉṟē teṟu kaṇai; valiyiṉ tīrntāṉ;
veṉṟi ippōtē kōṭum; kāṇ 'eṉa viḷampum ellai.