கம்பராமாயணம் 9202 · யுத்த 27.35

Section யுத்த காண்டம் / 27. இந்திரசித்து வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1விடிந்தது பொழுதும்; வெய்யோன் விளங்கினன், உலகம் மீதா
இடுஞ்சுடர் விளக்கம் என்ன, அரக்கரின் இருளும் வீய,
'கொடுஞ்சின மாயச் செய்கை வலியொடுங் குறைந்து குன்ற
முடிந்தனன், அரக்கன் 'என்னா, முழங்கினர் அமரர் எல்லாம்.

பொருள் · Meaning in Tamil

பொழுதும் விடிந்தது அரக்கரின் இருளும் வீய - பொழுதும் விடிந்தது. அரக்கரைப் போன்று இருளும் அழியுமாறு; வெய்யோன் உலகம் மீதாய் இடும் சுடர் விளக்கம் என்ன விளங்கினன் - சூரியன் உலகின்மேல் இட்ட சுடர் விடுகின்ற விளக்கு என்னும் படி விளக்கம் பெற்றுவிட்டான்; அரக்கன் வலியொடும் கொடுஞ் சினமாயச் செய்கை குறைந்து குன்ற - இனி இந்திரசித்து தன் வலிமையொடு கொடிய கோபமும் மாயச் செயலும் குறைந்து அழிய; முடிந்தனன் என்னா உம்பர் முற்றும் முழங்கினர் - முடிந்தனனே ஆவான் என்று தேவர் வானமெங்கும் ஆரவாரித்தனர்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The day dawned; the sun shone, like a blazing lamp set
  2. above the world, so that the darkness, like the Rākṣasas, perished;
  3. 'With his cruel wrath and magic deeds dwindling along with his strength,
  4. the Rākṣasa is finished,' the gods all roared.

What the poem says

Morning has come. The sun shines like a great lamp hung over the world, and the darkness vanishes as the Rākṣasas soon will.

Knowing that Intiracittu cannot survive by daylight, the gods sense that his strength, his rage and his sorcery are failing together. They shout that he is finished.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1viṭintatu poḻutum; veyyōṉ viḷaṅkiṉaṉ, ulakam mītāy
iṭuñ cuṭar viḷakkam eṉṉa, arakkariṉ iruḷum vīya,
'koṭuñ ciṉa māyac ceykai valiyoṭum kuṟaintu kuṉṟa
muṭintaṉaṉ, arakkaṉ 'eṉṉā, muḻaṅkiṉar umpar muṟṟum.