கம்பராமாயணம் 9203 · யுத்த 27.36

Section யுத்த காண்டம் / 27. இந்திரசித்து வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1'ஆர் அழியாத சூலத்து அண்ணல் தன் அருளின் ஈந்த
தேர் அழியாத போதும், சிலை கரத்து இருந்த போதும்,
போர் அழியான், இவ் வெய்யோன்; புகழ் அழியாத பொன் தோள்
வீர! இது ஆணை 'என்றான் வீடணன், விளைவது ஓர்வான்.

பொருள் · Meaning in Tamil

வீடணன் - மேல் நிகழ்வதை அறிந்தவனாகிய வீடணன்; புகழ் அழியாத பொன் தோள் வீர! - (இலக்குவனை நோக்கி) புகழ் அழியாமைக்குக் காரணமாகிய அழகிய தோள்களை உடையவீரனே! ஆர் அழியாத சூலத்து அந்தணன் அருளின் ஈந்த - கூர்மையழியாத சூலப்படையை உடைய அந்தணனாகிய சிவபெருமான் அருள் செய்து கொடுத்த; தேர் அழியாத போதும், சிலை கரத்து இருந்தபோதும் - தேர் அழியாதபோதும், வில் அவன் கரத்தில் இருக்கும் போதும்; இவ்வெய்யோன் போர் அழியான் இது ஆணை” என்றான் - இக்கொடியவன் போரில் அழியமாட்டான். இது அவ்விறைவனின் ஆணையாகும்' என்று கூறினான்.

இவ்வரத்தினை இந்திரசித்து எங்ஙனம் பெற்றான் என்பது காணற்பாலது. “தேரும் வில்லும் சிவன் அருளினால் கொடுக்கப்பெற்றவை. அவை அழியாமலிருக்கும் போது இவனும் அழியான் என்பது அக்கடவுள் இவனுக்குக் கொடுத்தவரம்” என வீடணன் இலக்குவனுக்கு இந்திரசித்தினை உயிர் வாங்கற்கு உபாயங் கூறியவாறு.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'While the chariot given in grace by the Brahmin with the trident whose point never dulls
  2. remains undestroyed, and while the bow is still in his hand,
  3. this cruel one will not be beaten in battle; hero of golden shoulders whose fame never fades,
  4. this is a sworn decree,' said Vīṭaṇaṉ, who foresaw what would come.

What the poem says

Vīṭaṇaṉ, who knows what is coming, tells Ilakkuvaṉ the condition of Intiracittu's boon. Civaṉ, the holy one with the ever-sharp trident, gave him his chariot and bow, and decreed that as long as the chariot stands and the bow is in his hand, he cannot be defeated.

The commentary explains that in this way Vīṭaṇaṉ shows Ilakkuvaṉ how Intiracittu can be killed: first destroy the chariot and the bow.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'ār aḻiyāta cūlattu antaṇaṉ aruḷiṉ īnta
tēr aḻiyāta pōtum, cilai karattu iruntapōtum,
pōr aḻiyāṉ, iv veyyōṉ; pukaḻ aḻiyāta poṉ tōḷ
vīra! itu āṇai 'eṉṟāṉ vīṭaṇaṉ, viḷaivatu ōrvāṉ.