கம்பராமாயணம் 9204 · யுத்த 27.37

Section யுத்த காண்டம் / 27. இந்திரசித்து வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1'பச்சை வெம்புரவி வீயா; பல இயல் சில்லி பாரில்
நிச்சயம் அற்று நீங்கா ' என்பது நினைந்து, வில்லின்
விச்சையின் கணவன் ஆனான், வின்மையால், வயிரம் இட்ட
அச்சினோடு ஆழி வெவ்வேறு ஆக்கினான், ஆணி நீக்கி.

பொருள் · Meaning in Tamil

வில்லின் விச்சையின் கணவன் ஆனான் - வில்வித்தைக்குத் தலைவனாகிய இலக்குவன்; “வெம்பச்சைப் புரவிவீயா - (இந்திரசித்தின் தேரில் பூட்டியுள்ள) கொடிய பச்சைப்புரவிகள் இறந்துபடா; பல்லியச் சில்லிபாரில் நிச்சயம் அற்று நீங்கா - பல இயல்புகள் அமைந்த (தேரின் சக்கரங்கள் உறுதியற்று பூமியில் அழியா; என்பது நினைந்து வின்மையால் ஆணி நீக்கி - என்பதை நினைந்து தன்வில்லின் திறத்தால் கடையாணியை நீக்கிவிட்டு; வயிரம் இட்ட அச்சினோடு ஆழி வெவ்வேறு ஆக்கினான் - வயிரத்தன்மை பொருந்திய அச்சினோடு சக்கரத்தை வெவ்வேறாகப் பிரித்து விட்டான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'The fierce green horses will not die; the wheels with their many parts
  2. will not lose their firmness and come off on the ground' — thinking this, he who was
  3. the master of the lore of the bow, by his archery, knocked out the linchpin
  4. and parted the wheels from the diamond-hard axle.

What the poem says

Ilakkuvaṉ, master of archery, sees that Intiracittu's fierce green horses cannot be killed and that the sturdy wheels will not break.

So he aims with great precision at the linchpin that holds a wheel on the axle and shoots it out, so that the wheels fall away from the diamond-hard axle. The chariot is destroyed without breaking any of its divine parts.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'paccai vem puravi vīyā; palliyac cilli pāril
niccayam aṟṟu nīṅkā' eṉpatu niṉaintu, villiṉ
viccaiyiṉ kaṇavaṉ āṉāṉ, viṉmaiyāl, vayiram iṭṭa
acciṉōṭu āḻi vevvēṟu ākkiṉāṉ, āṇi nīkki.