கம்பராமாயணம் 9205 · யுத்த 27.38

Section யுத்த காண்டம் / 27. இந்திரசித்து வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

மணி நெடுந் தேரின் கட்டுவிட்டு அது மறிதலோடும் - ஒளி மணிகள் பதித்துச் செய்யப்பட்ட நெடிய தேரின் கட்டுக்கோப்பு நீங்கி, அத்தேர் கீழ்மேல் ஆனவுடன்; அணி நெடும் புரவி எல்லாம் - (அத்தேரில் கட்டியிருந்த) அழகிய பெருமை வாய்ந்த குதிரைகள் எல்லாம்; திணி நெடும் மரம் ஒன்று ஆழிவாள் மழுத்தாக்க - திண்மையான நீண்ட மரம் ஒன்று சக்கரப்படையைப் போன்ற கூர்மையுடைய கோடாலி தாக்குதலால்; சிந்திப்பணை நெடு முதலும் நீங்க - சிதறிப் பருத்த நெடிய அடி மரமும் துணிபட்டு வேறாகி நீங்க; பாங்கு உறை பறவை போல ஆற்றல ஆய அன்றே - அம்மரத்திடத்தே தங்கி இருந்த பறவைகளைப்போலப் பிரிவாற்றாதனவாய் வருந்துவனவாயின.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. As the long jewelled chariot came apart and overturned,
  2. all the fine tall horses became helpless and distraught,
  3. like the birds that live on a great solid tree when an axe as sharp as a discus strikes it,
  4. scattering it, and its thick, tall trunk is severed.

What the poem says

With its wheels gone, Intiracittu's long, jewelled chariot falls apart and overturns. Its fine horses are left distressed and helpless.

The poet compares them to birds that have nested in a great tree when an axe as sharp as a discus cuts through its massive trunk: they flutter about with nowhere to go.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1maṇi neṭun tēriṉ kaṭṭu viṭṭu, atu maṟitalōṭum,
aṇi neṭum puravi ellām āṟṟala āya aṉṟē
tiṇi neṭu maram oṉṟu āḻi vāḷ maḻut tākka, cintip
paṇai neṭu mutalum nīṅka, pāṅku uṟai paṟavai pōla.