கம்பராமாயணம் 9209 · யுத்த 27.42

Section யுத்த காண்டம் / 27. இந்திரசித்து வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1மறைந்தன திசைகள் எங்கும்; மாறுபோய் மலையும் ஆற்றல்
குறைந்தனன்; இருண்ட மேகக் குழாத்திடைக் குருதிக் கொண்மூ
உறைந்துளது என்ன நின்றான் உருவினை, உலகம் எல்லாம்
நிறைந்தவன் கண்டான்; காணா, இனையது ஓர் நினைப்பன் ஆனான்.

பொருள் · Meaning in Tamil

திசைகள் எங்கும் மறைந்தன - (இலக்குவன் விட்ட அம்புகளால்) திசையிடம் முழுவதும் மறைந்தன; மாறுபோய் மலையும் ஆற்றல் குறைந்தனன் - (அவனுக்கு) மாறாகச் சென்று போர் செய்யும் வலிமை குறைந்தவனாய்; இருண்ட மேகக் குழாத்திடைக் குருதிக் கொண்மூ உறைந்துளது என்ன நின்றான் உருவினை - இருண்ட மேகக் கூட்டத்தினிடையே இரத்தம் சொரியும் மேகம் ஒன்று தங்கியுள்ளது என்னுமாறு நின்றவனாகிய இந்திரசித்தன் உருவத்தை; உலகம் எல்லாம் நிறைந்தவன் கண்டான்; காணா இனையது ஓர் நினைவது ஆனான் - உலகெங்கும் நிறைந்து நிற்பவனாகிய இலக்குவன் பார்த்தான்; பார்த்து இத்தகையதொரு எண்ணத்தை உடையவனான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. All the quarters were blotted out; his strength to go against him and fight
  2. dwindled; he who fills all the world saw the form of the one who stood
  3. like a blood-red cloud lodged in the midst of a mass of dark clouds;
  4. and seeing him, he came to the following thought.

What the poem says

Ilakkuvaṉ's arrows fill every direction, and Intiracittu no longer has the strength to fight back.

Among the dark clouds he now shows like a single cloud dripping blood, and Ilakkuvaṉ, here called 'he who fills the whole world', a reminder that he is divine, finally sees him. Seeing him, he forms a plan, given in the next verse.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1maṟaintaṉa ticaikaḷ eṅkum; māṟu pōy malaiyum āṟṟal
kuṟaintaṉaṉ; iruṇṭa mēkak kuḻāttiṭaik kurutik koṇmū
uṟaintuḷatu eṉṉa niṉṟāṉ uruviṉai, ulakam ellām
niṟaintavaṉ kaṇṭāṉ; kāṇā, iṉaiyatu ōr niṉaivatu āṉāṉ.