கம்பராமாயணம் 9210 · யுத்த 27.43
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
சிலை அறாது எனினும் - (இந்திரசித்தின் வில் என் அம்பினால் அறுபடாத தெய்வத்தன்மை உடையது எனினும்; மற்று அத்திண்ணியோன் திரண்ட தோளாம் மலை அறாது ஒழியாது என்னா - அத்திண்மைமிக்கவனாகிய இந்திரசித்தின் திரண்ட தோளாகிய மலை அறாமலிருக்காது என்று கருதக் கொண்டு; வரிசிலை ஒன்று வாங்கி கலை அறாத்திங்கள் அன்ன வாளியால் - கட்டமைந்ததொரு வில்லை வளைத்து ஒருகலை அறாதுள்ள பிறைத்திங்களைப் போன்ற அம்பினால்; கையை, விலை அறாமணிப்பூணோடும், வில்லொடும், நிலத்து வீழக் கொய்தான் - அந்த இந்திரசித்தனுடைய கையை விலைதீராத (விலைமதிப்புடைய) மணிகள் பதித்த அணிகலன்களோடும் வில்லொடும் தரையில் வீழுமாறு அறுத்துத் தள்ளினான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'Though the bow may not be cut, that mighty one's massive shoulder,
- a mountain, will not fail to be cut,' he thought, and drawing a banded bow,
- with an arrow like the moon that has not lost a single digit, he lopped off the arm,
- so that it fell to the ground with its priceless jewelled ornaments and the bow.
What the poem says
Intiracittu's bow, a divine gift, cannot be broken by any arrow, but Ilakkuvaṉ reasons that the arm holding it can be cut.
He draws his bow and looses a crescent-headed arrow shaped like the moon. It severs Intiracittu's arm, which falls to the ground with its priceless jewelled bracelets and the bow still in its grip. Now the second condition of Civaṉ's boon has been met: he no longer holds his bow.