கம்பராமாயணம் 9211 · யுத்த 27.44

Section யுத்த காண்டம் / 27. இந்திரசித்து வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1பாக வான் பிறைபோல் வெவ்வாய்ச் சுடுகணை படுதலோடும்,
மாக வான் தடக்கை மண்மேல் விழுந்தது மணிப்பூண் மின்ன
வேக வான் கடுங்கால் எற்ற முற்றும்போய் விளியும் நாளில்
மேகம் ஆகாயத்து இட்ட வில்லொடும் வீழ்ந்தது என்ன.

பொருள் · Meaning in Tamil

வான்பாகம் பிறை போல் வெவ்வாய்ச் சுடுகணை படுதலோடும் - (இலக்குவன் விடுத்த) வானில் தோன்றும் பிறைச்சந்திரனைப் போல், கொடிய வாயினை உடையதாய்ச் சுடுகின்ற இயல்பினை உடைய அம்பு (இந்திரசித்தன்மேல்) பட்டவுடனே; வேகவான் கொடுங்கால் எற்ற முற்றும் போய் விளியும் நாளில் - மிக்க வேகத்தையுடைய கடுங்காற்று மோதுதலினால் உலகம் முழுவதும் சென்று அழியும் ஊழி இறுதியில்; மேகம் ஆகாயத்து இட்ட வில்லொடும் வீழ்ந்தது என்ன - மேகம் ஆகாயத்தில் இட்ட இந்திர வில்லினோடும் (மண்மிசை வீழ்ந்தது என்னும்படி, மாகவான் தடக்கை மணிப் பூண் மின்ன மண் மேல் விழுந்தது - ஆகாயத்தில் இருந்த சிறந்த பெரிய அவ்விந்திரசித்தின் கை மணிகள் பதித்த அணிகலன் மின்ன மண்மிசை வீழ்ந்தது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. As the scorching arrow with its cruel mouth like a slice of the crescent moon struck,
  2. the great broad arm from the sky fell to the earth, its jewelled ornaments flashing,
  3. as if, on the day when all things perish as the swift cruel wind batters them,
  4. a cloud had fallen together with the bow it had set in the sky.

What the poem says

The crescent-headed arrow strikes, and Intiracittu's huge arm falls from the sky to the earth, its jewelled ornaments flashing.

The poet compares the dark arm falling with the bow still attached to a storm cloud falling from the sky together with the rainbow it had held, as might happen on the last day, when a terrible wind brings the whole world down.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1pāka vāṉ piṟaipōl vev vāyc cuṭu kaṇai paṭutalōṭum,
vēka vāṉ koṭuṅ kāl eṟṟa muṟṟum pōy viḷiyum nāḷil
māka vāṉ taṭak kai maṇmēl viḻuntatu maṇip pūṇ miṉṉa,
mēkam ākāyattu iṭṭa villoṭum vīḻntatu eṉṉa.