கம்பராமாயணம் 9214 · யுத்த 27.47
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
மொய் அறமூர்த்தி அன்ன மொய்ம்பினான் அம்பினால் - வலிமை பொருந்திய அறக்கடவுள் போன்ற வலிமையுடையவனாகிய இலக்குவனின் அம்பினால்; பொய் அறச் சிறிது என்று எண்ணும் பெருமையான் புதல்வன் - பொய்யைப் பெரும்பாதகமாக நினைக்காமல் மிகவும் எளிமையானது என்று கருதி மேற்கொள்ளும் பெருமையுடைய இராவணன் மகன்; பூத்த மை அறக்கரிது என்று எண்ணும் மனத்தினான் - அப்போது உண்டான மையானது (இவன் மனம் நம்மினும்) மிகக் கரியது' என்று எண்ணுதற்குரிய கருமனத்தினன் ஆகிய இந்திரசித்தனுடைய; வயிரம் அன்னகை அறக்கண்டார் நிருதர் தலை அற்றார் போல் கலங்கினார் - வயிரம் போன்ற கை அற்றுப் போகக் கண்டவர்களாகிய அரக்கர் தம் தலை அற்றவர்களைப் போல மனம் கலங்கினார்கள்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- When, by the arrow of him whose might was like Dharma itself in strength,
- the arm of the son of that great one who thinks lying a very small thing,
- the son whose heart is such that fresh soot would think it far blacker than itself — that diamond-hard arm —
- was cut off, the Rākṣasas who saw it were shaken as if their own heads had been cut off.
What the poem says
The Rākṣasas watch their prince's diamond-hard arm being cut off by Ilakkuvaṉ, whose strength is compared to Righteousness itself, and they are as stricken as if their own heads had been severed.
The poet does not spare father or son. Irāvaṇaṉ is the 'great one' who treats lying as a trifle, and Intiracittu has a heart so black that even fresh lamp-soot would think it darker than itself.