கம்பராமாயணம் 9217 · யுத்த 27.50
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
கடைநாள் உற்ற காற்று என, உரும் ஏறு என்ன கனல் என - ஊழியிறுதியில் வந்த காற்று என்னும் படியும், இடியேறு என்னும்படியும், வடவைக்கனல் என்னும் படியும்; கூற்றம் ஒர் சூலம் கொண்டு குறுகியது என்ன - எமன் ஒரு சூலத்தைக் கொண்டு நெருங்கினான் என்னும்படியும்; கொல்வான் தோன்றினான் - (இலக்குவனைக் கொல்வதற்காக) (இந்திரசித்து) தோன்றினான்; அதனை அயோத்தி வேந்தற்கு இளையவன் காணா - அதனை இராமனுக்கு இளையவனாகிய இலக்குவன் கண்டு; இனி, தலை துணிக்கும் காலம் ஏற்றது, என்று இதனைச் செய்தான் - “இப்பொழுது இவன் தலையைத் துணிக்கும் காலம் வந்துவிட்டது” என்று இச்செயலைச் செய்தான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Like the wind that comes on the last day, like a thunderbolt, like fire,
- as if Death himself had come close bearing a trident,
- he appeared, bent on killing; seeing him, and saying, 'Now the time to sever his head
- has come,' the younger brother of the king of Ayōttī did this.
What the poem says
Intiracittu swoops down to kill, like the wind at the end of the world, like a thunderbolt, like fire, like Death himself carrying a trident.
Ilakkuvaṉ, younger brother of the king of Ayōttī, sees him coming and knows the moment to cut off his head has arrived. The verse ends with 'he did this', and the next verse describes the fatal arrow.