கம்பராமாயணம் 9218 · யுத்த 27.51

Section யுத்த காண்டம் / 27. இந்திரசித்து வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

மறைகளே தேறத்தக்க வேதியர் வணங்கற்பால இறையவன் - வேதங்களே தெளியத்தக்கவனும் வேதியர்கள் வணங்குதற்கு உரியவனுமாகிய இறைவன்; இராமன் என்னும் நல் அறமூர்த்தி என்னின் - இராமன் என்கின்ற நல்ல தரும மூர்த்தியே என்பது உண்மையாயின்; பிறை எயிற்று இவனைக் கோறி” என்று, ஒரு பிறைவாய் வாளி - பிறைச் சந்திரனைப் போன்ற கோரைப் பல்லினையுடைய இந்த இந்திரசித்தனைக் கொல்வாயாக, என்று ஒரு பிறைவாய் அம்பினை; நிறை உற வாங்கிவிட்டான் உலகு எலாம் நிறுத்தி நின்றான் - தன் வலிமை முழுவதும் பொருந்த வில்லில் தொடுத்து விட்டான்; அதனால் இலக்குவன் உலகு முழுவதையும் அரக்கரால் அழிவு எய்தாதவாறு நிறுத்தித் தானும் புகழுடன் அவ்வுலகம் உள்ளவும் நின்றவனாயினான்.

இராம நாமத்தை முன்னிறுத்தி இந்திரசித்தனைக் கொன்றவாறாம். இராம நாமத்தின் சிறப்பையும், இந்திரசித்தனின் வலிமையையும் ஒரு சேர விளக்கியதாம். இராவணாதி அரக்கரின் முழு ஆற்றலின் வடிவமாக விளங்கியவன் இந்திரசித்தன். இந்த வல்லமையை வென்றழிக்கவே பரம் பொருள் கால் நிலந்தோய மண்மிசை நடந்தனன். இராவணனின் வல்லமையின் - வெற்றியின் அமிசமாக விளங்கிய இவ்விந்திரசித்து வீழ்ச்சியின் பின் இராவண வதம் என்பது ஒரு சம்பவமே. இவனைக் காட்டிலும் இறைவனின் திருநாமம் பக்தனுக்கு வல்லமையைக் கொடுக்குமென்பர் அவ்வகையில் இராமனுஜனாகிய இலக்குவன் இராமநாமத்தை உச்சரித்து அம்பெய்து இராவணியைக் கொல்வது நினைக்கற்பாலது. “உலகெலாம் நிறுத்தி நின்றான்' என்பதற்கு, “உலகத்தை சுமந்து கொண்டு நின்றவனாகிய ஆதி சேடனின் அமிசமாகிய இலக்குவன் எனப் பொருள் கூறலுமாம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "If the Lord whom the Vedas alone can come to know, whom the Brahmins ought to worship,
  2. is truly Irāmaṉ, the good embodiment of dharma,
  3. then slay this one with crescent fangs" — so saying, a crescent-mouthed arrow
  4. he drew to the full and loosed, he who stood upholding all the worlds.

What the poem says

The climax of the duel between Ilakkuvaṉ and Intiracittu. Ilakkuvaṉ sets his final arrow with a vow: if Irāmaṉ is truly the supreme god of the Vedas and dharma made flesh, let the arrow kill. The name of Irāmaṉ, invoked by his devoted brother, achieves what no weapon could.

Intiracittu embodies the whole strength of Irāvaṇaṉ's demon host; once he falls, Irāvaṇaṉ's own death is almost a formality. The phrase "he who stood upholding all the worlds" can mean that Ilakkuvaṉ saved the worlds from the demons, or allude to his being a portion of Ātiśeṣaṉ, the serpent that bears the earth.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'maṟaikaḷē tēṟat takka, vētiyar vaṇaṅkaṟpāla
iṟaiyavaṉ irāmaṉ eṉṉum nal aṟa mūrtti eṉṉiṉ,
piṟai eyiṟṟu ivaṉaik kōṟi' eṉṟu, oru piṟai vāy vāḷi
niṟai uṟa vāṅki viṭṭāṉ ulaku elām niṟutti niṉṟāṉ.