கம்பராமாயணம் 9219 · யுத்த 27.52
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
அப்பகழிப்புத்தேள் - (இலக்குவன் விடுத்த) அவ் அம்புத் தெய்வம்; நேமியும், குலிசவேலும் - (திருமாலின்) சக்கரப்படையும், (இந்திரனின்) வச்சிரப்படையும்; நெருப்புக் கண்ணான் நாம வேல்தானும் - நெற்றியில் நெருப்புக் கண்ணை உடைய உருத்திரனின் அஞ்சத்தக்க சூலவேலும்; மற்றை நான் முகன் படையும் நாண - எஞ்சியுள்ள பிரமனுடைய பிரமாத்திரமும் நாணுமாறு; தீமுகம் கதுவ ஓடிச்சென்று அவன் சிரத்தைத்தள்ளி - நெருப்பு முனையில் பற்றி எறியும் படியாக ஓடிச் சென்று அந்த இந்திரசித்தின் தலையை அறுத்துத் தள்ளிவிட்டு; அமரர் பூமழை சிந்த, பொலிந்தது - தேவர்கள் மலர்மாரி சொரிய விளங்கிற்று.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The discus, the thunderbolt-spear, and the dread spear of the one
- with the fire-eye on his brow, and the weapon of the Four-faced one besides, put to shame,
- it sped with its fiery tip blazing, struck off his head,
- and as the gods showered flowers, that arrow-god shone in glory.
What the poem says
Ilakkuvaṉ's arrow, spoken of as a deity, succeeds where the greatest divine weapons had failed against Intiracittu: Tirumāl's discus, Intiraṉ's thunderbolt, Civaṉ's trident and Piramaṉ's missile are all "put to shame". It severs the demon prince's head, and the gods rain flowers in celebration.