கம்பராமாயணம் 9221 · யுத்த 27.54

Section யுத்த காண்டம் / 27. இந்திரசித்து வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1விண்தலத்து இலங்கு திங்கள் இரண்டொடும் மின்னு வீசும்
குண்டலத் துணைகேளாடும் கொந்தளக் குஞ்சிச் செங்கேழ்ச்
சண்டவெங் கதிரின் கற்றைத் தழையொடும் இரவிதான் இம்
மண்தலம் வீழ்ந்தது என்ன வீழ்ந்தது தலையும் மண்மேல்.

பொருள் · Meaning in Tamil

விண்தலத்து இலங்கு திங்கள் இரண்டொடும் - வானத்தில் விளங்கும் இரு பிறை மதிகளோடும்; மின்னு வீசும் குண்டலத்துணைகளோடும் - ஒளி வீசுகின்ற இரு குண்டலங்களோடும்; கொந்தளக் குஞ்சிச் செங்கேழ்ச் சண்ட வெங்கதிரின் கற்றைத் தழையொடும் - சுருண்ட குடுமியாகிய செந்நிறத்தையுடைய கொடிய வெப்பமான கதிர்களின் தாழ்ந்த கற்றையோடும்; இரவிதான் அம்மண்டலம் வீழ்ந்தது என்ன - சூரியன் தான் அம்மண்தலத்தில் வீழ்ந்தது என்று எண்ணுமாறு; தலையும் மண் மேல் வீழ்ந்தது - இந்திரசித்தின் தலையும் (இருகோரப் பற்களோடும் குண்டலங்களோடும், செம்பட்டை மயிர்க்குடுமியோடும்) மண் மேல் விழுந்தது.

'சூரியன் திங்களிரண்டொடு வீழ்ந்தது போன்றது” என்றது இல்பொருளுவமையும், தற்குறிப்பேற்றமுமாம். கொந்தளக்குஞ்சி - சுருண்ட குடுமி.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. With two moons that shine in the sky,
  2. with a pair of earrings flashing light, and with the red tuft of curled hair
  3. like a hanging sheaf of fierce hot rays, as though the Sun himself
  4. had fallen, disc and all, so the head too fell upon the earth.

What the poem says

The fallen head is pictured as the sun crashing to earth: the two curved fangs are two crescent moons, the earrings flash, and the coppery tuft of hair is a sheaf of burning rays. Since the sun never falls with two moons beside it, this is an image of something that does not exist, joined to a poetic fancy about why things look as they do.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1viṇtalattu ilaṅku tiṅkaḷ iraṇṭoṭum miṉṉu vīcum
kuṇṭalat tuṇaikaḷōṭum kontaḷak kuñcic ceṅ kēḻc
caṇṭa veṅ katiriṉ kaṟṟait taḻaiyoṭum iravitāṉ am
maṇṭalam vīḻntatu eṉṉa vīḻntatu talaiyum maṇmēl.