கம்பராமாயணம் 9225 · யுத்த 27.58

Section யுத்த காண்டம் / 27. இந்திரசித்து வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

அறந்தலை நின்றார்க்கு இல்லை அழிவு” எனும் அறிஞர் வார்த்தை சிறந்தது - அறவழியில் நின்றவர்க்கு இல்லை அழிவு' என்ற அறிஞரின் மொழி (உண்மையாய்ச்) சிறப்புற்றது; (எங்ஙனம் எனின்?) சரங்கள் பாயச் சிந்திய சிரத்த ஆகி - அம்புகள் பாய்ந்ததனால் சிதறப்பெற்ற தலையினவாகி; பறந்தலை அதனில் மற்று அப்பாதக அரக்கன் கொல்ல - போர்க்களத்தில் அந்தப் பாதக அரக்கனாகிய இந்திரசித்தினால் கொல்லப்பட்டு; இறந்தன கவிகள் எல்லாம் இமையோர் ஏத்த எழுந்தன - இறந்தனவாகிய குரங்குகள் எல்லாம் இமையவர்கள் வாழ்த்தியதனால் உயிர் பெற்று எழுந்தன (ஆகலின் என்க).

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The word of the wise, "For those who stand by dharma there is no ruin,"
  2. proved its worth: with heads shattered as the arrows pierced them,
  3. on that battlefield slain by that sinful demon,
  4. all the dead monkeys rose up again as the gods sang praise.

What the poem says

The monkeys whom Intiracittu had killed in the battle, their heads smashed by his arrows, come back to life while the gods praise them. The poet sees in this the proof of the old saying that those who stand by dharma never truly perish.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'aṟamtalai niṉṟārkku illai aḻivu 'eṉum aṟiñar vārttai
ciṟantatu caraṅkaḷ pāyac cintiya ciratta āki,
paṟantalai ataṉil maṟṟu ap pātaka arakkaṉ kolla,
iṟantaṉa kavikaḷ ellām eḻuntaṉa, imaiyōr ētta.