கம்பராமாயணம் 9234 · யுத்த 27.67
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
ஒன்றும் உரைத்திலன் - (தன் அடியுறையைக் கண்டு) களிப்புக்கொண்டவனாகிய இராமன் ஒன்றும் பேசாதவனாய்; தலையினை நோக்கும் - தன் முன் வைக்கப்பட்டுள்ள இந்திரசித்தன் தலையினை நோக்குவான்; தம்பி கொற்றவை தழீஇய பொன்தோள் மலையினை நோக்கும் - பின்பு (அத்தலையை வீழ்த்திய) தம்பியின் வெற்றித்திரு தழுவிய அழகிய தோளாகிய மலையினை நோக்குவான்; நின்ற மாருதி வலியை நோக்கும் - பின்பு அவனுக்கு ஊர்தியாக இருந்த அனுமனது வலிமையை நோக்குவான்; சிலையினை நோக்கும், தேவர் செய்கையை நோக்கும் - பின்பு (இலக்குவன் கையிலுள்ள) வில்லின் சிறப்பினை நோக்குவான் (இந்திரசித்தன் வீழ்ச்சிகண்டு தூசு வீசி ஆரவாரிக்கும்) தேவர்களுடைய செயல்களை நோக்குவான்; செய்த கொலையினை நோக்கும் - (அங்ஙனம் தேவர்களும் மகிழுமாறு) இலக்குவன் செய்த கொலையின் சிறப்பை நோக்குவான்.
உவகை மிகுந்ததால் பேச்சுத் தோன்றாது என்பார். “களிப்புக் கொண்டான் ஒன்றும் உரைத்திலன்” என்றார் வெற்றி பெற்ற தோள் ஆதலின், “கொற்றவை தழீஇய பொற்றோள்' எனச் சிறப்பிக்கப்பட்டது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- He would gaze at the head; he would gaze at the mountain of his brother's golden shoulders
- embraced by the goddess of victory; he would gaze at the might of Māruti standing there;
- he would gaze at the bow; he would gaze at what the gods were doing; at the slaying
- that had been done he would gaze; he said not a word, filled with delight.
What the poem says
Irāmaṉ is too overjoyed to speak. His eyes move from the severed head to Ilakkuvaṉ's victorious shoulders, to Aṉumaṉ (Māruti, son of the Wind) who carried him, to the bow, to the gods celebrating overhead, and back to the deed itself. The shoulders are "embraced by the goddess of victory" because they have just won.