கம்பராமாயணம் 9236 · யுத்த 27.69

Section யுத்த காண்டம் / 27. இந்திரசித்து வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

கம்பமதத்துக் களியானைக் காவல்சனகன் பெற்றெடுத்த - (இலக்குவ! நீ இந்திரசித்தனை வென்றதனால்) அசைந்தாடும் இயல்புயை மதக்களிப்பு மிக்க யானை போன்று தன் இனத்தைக் காக்கும் காவற்சிறப்பினை உடைய சனகன் பெற்ற; கொம்பும் என்பால் இனி வந்து குறுகினள் என்று அகம் குளிர்ந்தேன் - பூங்கொம்பு போன்றவளாகிய சீதையும் இனி என்னிடம் வந்து நெருங்கிவிட்டாள் என்று மனங்குளிர்ந்தேன்; வம்பு செறிந்த மலர்க்கோயில் மறையோன் படைத்த மாநிலத்தில் - மணம் நிறைந்த தாமரை மலரைக் கோயிலாகக் கொண்ட பிரமன் படைத்த இப்பெரிய உலகத்தில்; “தம்பி உடையான் பகை அஞ்சான் என்னும் மாற்றம் தந்தனையால் - “தம்பியை உடையவன் பகைக்கு அஞ்சமாட்டான்” என்னும் சொல்லை எனக்குத் தந்தனை” (என்று பாராட்டினான்.

கம்பம் - அசைவு. யானை தன் இனத்தைக் காப்பதில் தலை சிறந்ததாதலின் அது போன்ற காவற் சிறப்பினை உடையவன் சனகன் என்றவாறு. “சீதை என்பால் குறுகினள் என்று அகம் குளிர்ந்தேன்.” “தம்பி உடையான் பகையஞ்சான்” என்னும் மாற்றம் தந்தனை” என்றெல்லாம் இராமன் பாராட்டுவதன் காரணம் இந்திரசித்தன் மேல் கிடைத்த வெற்றியேயாம். இனி இராவண வதம் எளிமை என்பது குறிப்பு. துள்ளும் ஓசையில் இந்த அறுசீர்ச் சந்த விருத்தம் ஒன்றினை இடையே கம்பர் அமைத்து இராமபிரானின் உள்ளத்தே துள்ளும் களிப்பினைப் படம் பிடித்துக் காட்டினார் என்பது மகாவித்துவான். மயிலம். வே. சிவசுப்பிரமணியன் அவர்கள் கருத்து.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "The tender branch born to Caṉakaṉ, guardian like an elephant swaying with rut,
  2. will now come close to me, so I thought, and my heart grew cool;
  3. for in this great world made by the Vedic one whose temple is the fragrant flower,
  4. you have given me the saying, 'He who has a brother does not fear his foe.'"

What the poem says

Irāmaṉ finally speaks, praising Ilakkuvaṉ. With Intiracittu dead, he feels that Cītai, daughter of King Caṉakaṉ, is as good as back with him, and the killing of Irāvaṇaṉ will be easy. Caṉakaṉ is likened to a rutting elephant, an animal noted for guarding its herd.

Irāmaṉ says his brother has made true the saying "He who has a brother need not fear any foe" across all of Piramaṉ's creation. Kampaṉ sets this one verse in a lively, bouncing metre in the middle of the chapter to match the joy leaping in Irāmaṉ's heart.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kampa matattuk kaḷi yāṉaik kāval caṉakaṉ peṟṟeṭutta
kompum eṉpāl iṉivantu kuṟukiṉāḷ eṉṟu akam kuḷirntēṉ;
vampu ceṟinta malark kōyil maṟaiyōṉ paṭaitta mā nilattil,
"tampi uṭaiyāṉ pakai añcāṉ" eṉṉum māṟṟam tantaṉaiyāl.