கம்பராமாயணம் 9237 · யுத்த 27.70
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
தூக்கிய தூணி வாங்கி - இலக்குவன் தோளில் தொங்கவிட்டிருந்த அம்பறாத்தூணியைக் கழற்றி விட்டு; தோளொடு மார்பைச் சுற்றி வீக்கிய கவசபாசம் ஒழித்து - தோளோடு சேர்த்து மார்பைச் சுற்றிக் கட்டியிருந்த கவசத்தின் கயிற்றை அவிழ்த்து; அது விரைவின் நீக்கி - அக்கவசத்தை விரைவாக நீக்கிவிட்டு; தாக்கிய பகழிக் கூர்வாய்த் தடிந்தபுண் தழும்பும் இன்றி - (பகைவன்) தாக்கிய அம்பின் கூரிய வாய் வெட்டிய புண்ணின் சுவடும் இல்லாதபடி, பல்கால் தழுவிப் பொன் தடந் தோளின் ஒற்றிப் போக்கினன் - பலமுறை தழுவியும் அழகிய பெரிய தோளினால் ஒற்றியும் போக்கினான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- He took off the quiver that hung there, and the cords of the armour bound
- around the shoulders and chest he undid, and quickly removed it;
- and the wounds that the sharp mouths of the striking arrows had cut, leaving not even a scar,
- he took away, embracing him many times and pressing them with his great golden arms.
What the poem says
Irāmaṉ unstraps his brother's quiver and armour with his own hands. Then, by hugging him again and again and pressing his wounds with his arms, he heals every cut the enemy's arrows made, so completely that not even a scar remains. The touch of the divine Irāmaṉ is itself a cure.