கம்பராமாயணம் 9238 · யுத்த 27.71
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
ஏடு அவிழ் அலங்கல் மார்பன் - இதழ்கள் விரியப் பெற்ற மலர் மாலை அணிந்த மார்பினை உடைய இராமன்; 'ஆடவர் திலக! நின்னால் அன்று! இகல் அனுமன் என்னும் சேடனால் அன்று - (இலக்குவனை நோக்கி) 'ஆடவர்களிற் சிறந்தவனே! (இவ்வெற்றி) நின்னால் உண்டானது அன்று! அனுமன் என்கின்ற வல்லமைமிக்க உயர்ந்த பண்பினனாலும் அன்று; வேறு ஓர் தெய்வத்தின் சிறப்பும் அன்று - வேறோர் தெய்வத்தின் சிறப்பினாலும் அன்று; வீடணன் தந்த வென்றி ஈது என மெய்ம்மை விளம்பி இப்பால் இனிதின் இருந்தனன் - “வீடணன் தந்த வென்றி என மெய்யான காரணத்தைக் கூறிப் பாராட்டிவிட்டு இங்கு இனிதாக இருந்தான்.
நாகபாசப் படலத் திறுதியில் “கெடுத்தனை வீடணா” என்று (கம்ப.8227) அவலாதி சயத்தில் இராமன் உரைத்த வார்த்தை வீடணன் மனத்தைப் புண்படுத்தியிருக்குமாயின் இங்கு “வீடணன் தந்த வென்றி“ எனப் பாராட்டியது அதனைச்சமன் செய்ததாகும் என்பது மகா வித்துவான். வே. சிவசுப்பிரமணியன் அவர்கள் கருத்து.
ஆங்கிலம் · English translationAI
Translation
- "O jewel among men! It was not by you! Nor by the hero called Aṉumaṉ,
- mighty in battle; nor by the glory of any other god;
- this is the victory that Vīṭaṇaṉ gave," so he declared the truth,
- and he whose chest bears a garland of opening petals stayed there content, on this side.
What the poem says
Irāmaṉ gives the credit for the victory to Vīṭaṇaṉ, Irāvaṇaṉ's brother who had come over to his side. It was Vīṭaṇaṉ who revealed Intiracittu's secret sacrifice and guided Ilakkuvaṉ to it.
Earlier, in his despair after the serpent-noose battle, Irāmaṉ had said bitter words that blamed Vīṭaṇaṉ and may have hurt him. This generous public praise balances that. With the episode closed, the scene now shifts to the demon side.