கம்பராமாயணம் 9239 · யுத்த 28.1

Section யுத்த காண்டம் / 28. இராவணன் சோகப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1ஓத ரோதன வேலை கடந்துளார்
பூதரோதரம் புக்கென போர்த்து இழி
சீதரோதக் குருதித் திரை ஒரீஇ
தூதர் ஓதவெங் காலின் துதைந்துளார்.

பொருள் · Meaning in Tamil

தூதர் தாதையின் சொல்லுவார் - (போர்க்களத்திலிருந்து இராவணனின்) தூதுவர்கள் (நடந்தவற்றை) தந்தையாகிய இராவணனிடம் சொல்லும் பொருட்டு; ரோதன ஓத வேலை கடந்துளார் - அழுகையாகிய அலைகடலைக் கடந்தவர்களாய்; போர்த்துஇழி சீதரோதக் குருதித்திரை ஒரீஇ - (போர்க்களமெங்கும்) போர்த்தது போல் மூடிக்கொண்டு இழிந்து ஓடுகின்ற குளிர்ந்த கரையை உடைய இரத்த அலைகளைக் கடந்து; பூதர உதரம் புக்கென ஓடினர் - மலை வயிற்றுள் புகுந்தாற்போல் (கோபுர வாயிலில் புகுந்து) (இலங்கையினுள்) ஓடினர்.

தூதர் ரோதனம், பூதரம், உதரம், ரோதம் என்பன வடசொற்கள். ரோதனம் - அழுகை; பூதரம் - மலை; உதரம் - வயிறு, நடுவிடம், ரோதம் கரை; ஓதம் - அலை; வேலை-கடல்; கதம் - குளிர்ச்சி, ரோதம் என்பதற்குத் துன்பம் என்று பொருள் கொள்ளினுமாம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Having crossed a surging sea of weeping,
  2. as if entering a mountain's belly, leaving behind the blood-waves with cool banks
  3. that spread like a covering and ran down,
  4. the messengers ran off to tell the father.

What the poem says

The scene changes to Ilaṅkai, opening the chapter of Irāvaṇaṉ's grief. Messengers flee the battlefield through a sea of lamentation and across waves of blood to tell Irāvaṇaṉ, the father, that his son is dead. They vanish into the city gate as if into the belly of a mountain. The verse is a showpiece of Sanskrit words in Tamil (rōtaṉam "weeping", pūtaram "mountain", utaram "belly", rōtam "bank") with a play on their sounds.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1ōta rōtaṉa vēlai kaṭantuḷār
pūtarōtaram pukkeṉa pōrttu iḻi
cītarōtak kurutit tirai orīi
tūtar ōṭiṉar tātaiyiṉ colluvār.