கம்பராமாயணம் 9240 · யுத்த 28.2
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
அன்றில் அம் கரும் பேடைகள் ஆம் என - (தூதர்கள்) அன்றிற் பறவைகளின் அழகிய கரிய பேடைகளைப் போல; அரக்கியர் முன்றில் எங்கும் மொய்த்து அழ - அரக்கியர் தம் முன்றில் எங்கும் மொய்த்துக் கொண்டு அழ; 'இன்று இலங்கை அழிந்தது' என்று ஏங்குவார் - 'இன்று இலங்கை நகரம் அழிந்தது' என்று கூறிக் கொண்டு ஏங்குபவராய்; இலங்கு அயில் தாதையைச் சென்று சேர்ந்துளார் - விளங்குகின்ற வேற்படையையுடைய இந்திரசித்தின் தந்தையைச் சேர்ந்தார்கள்.
இலங்கை மாநகரின் செல்வத் திருமகனும் இளவரசனும் ஆகையினால் இந்திரசித்தின் இறப்பு இலங்கை அழிவதற்கு ஒப்பாகும் எனவே 'இன்று இலங்கை அழிந்தது' என்று தூதர் ஏங்கினர் என்பதாகும்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Like lovely dark hen-birds of the aṉṟil,
- while demon women crowded weeping in every courtyard,
- crying out in anguish, "Today Ilaṅkai is destroyed,"
- they went and reached the father of the one with the shining spear.
What the poem says
The news spreads ahead of the messengers. Demon women gather and wail in every courtyard like aṉṟil birds, which in Tamil poetry are said to cry and pine when parted from their mates. The messengers lament that Ilaṅkai itself has fallen today: Intiracittu was the city's prince and its greatest strength, so his death means the end of the city.