கம்பராமாயணம் 9242 · யுத்த 28.4
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
மாடு இருந்தவர் மாதவர் வானவர் - (தூதர் சொன்னபோது) இராவணன் அருகில் இருந்தவர்களாகிய பெருந்தவமுடையவர்களும், தேவர்களும்; ஆடல் நுண் இடையார் மற்றும் யாவரும் - ஆடும் இயல்பினராகிய நுண்ணிய இடையையுடைய பெண்டிரும் மற்றும் யாவரும்; வீடும், இன்று, இவ்உலகு' என விம்முவார் - 'இவ்வுலகம் இன்று அழியும்' எனப் புலம்பி; ஓடி, எங்கணும் சிந்தி ஒளித்தனர் - ஓடி எங்கும் சிதறி ஒளித்துக் கொண்டனர்.
மாடு - பக்கம், வீடுதல் - அழிதல், விம்முதல் - தேம்பிப் புலம்புதல்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Those who sat beside him, the great ascetics, the gods,
- the slender-waisted dancing women, and everyone else,
- sobbing, "This world will perish today,"
- ran off, scattered everywhere and hid.
What the poem says
The moment the news is spoken, everyone in Irāvaṇaṉ's hall, from captive sages and gods to dancing girls, expects an explosion of fury that will end the world. They flee in every direction and hide.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1māṭu iruntavar mātavar vāṉavar
āṭal nuṇ iṭaiyār maṟṟum yāvarum
'vīṭum 'iṉṟu iv ulaku 'eṉa vimmuvār.
ōṭi eṅkaṇum cinti oḷittaṉar.