கம்பராமாயணம் 9244 · யுத்த 28.6

Section யுத்த காண்டம் / 28. இராவணன் சோகப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1'வாய்ப் பிறந்தும் உயிர்ப்பின் வளர்ந்தும் வான்
காய்ப்பு உறும் தறு கண்ணிடைக் காந்தியும்
போய்ப் பிறந்து இவ் உலகைப் பொதியும்வெந்
தீப் பிறந்துளது இன்று 'எனச் செய்ததால்.

பொருள் · Meaning in Tamil

வாய்ப்பிறந்தும் உயிர்ப்பின் வளர்ந்தும் - (இராவணனது) வாயில் பிறந்தும் அவனது மூச்சுக்காற்றில் வளர்ந்தும்; வான் காய்ப்பு உறும் தொறும் கண்ணிடைக் காந்தியும் போய்ப் பிறந்து - பெரும் வெறுப்பு (வளர்ந்து) தோன்றுந்தோறும் கண்களிலே எரிந்து போய்த் தோன்றி; 'இவ்உலகைப் பொதியும் வெந்தீ - 'இவ்வுலகத்தையெல்லாம் மூடுகின்ற வெப்பமிக்க தீ; இன்று பிறந்துளது' எனச் செய்ததால் - இன்று பிறந்தது' என்று உலகம் சொல்லுமாறு பரவியது.

உலகைப் பொதியும் வெந்தீ - ஊழித்தீ. வான் - பெருமை, காய்ப்பு - வெறுப்பு.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Born in his mouth, growing on his breath, and each time
  2. his great bitterness welled up, blazing in his eyes,
  3. it went forth so that people said, "A fierce fire
  4. that will wrap up this whole world has been born today."

What the poem says

Irāvaṇaṉ's grief and rage become a fire: it is born in his mouth, fed by his heaving breath, and blazes from his eyes whenever his anguish swells, until the world thinks the fire that ends an age has broken out.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'vāyp piṟantum uyirppiṉ vaḷarntum vāṉ
kāyppu uṟumtoṟum kaṇṇiṭaik kāntiyum
pōyp piṟantu iv ulakaip potiyum ven
tīp piṟantuḷatu iṉṟu 'eṉac ceytatāl.