கம்பராமாயணம் 9245 · யுத்த 28.7
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
படம் பிறங்கிய பாந்தளும் பாரும் - படம் விளங்குகின்ற ஆதிசேடனும், அவனால் தாங்கப்பட்ட பூமியும்; இடம் பேர்ந்து பிறங்கி, வலம் பெயர்ந்து ஈடு உற - இடப்பக்கமாகப் பேர்ந்து பொருந்தியும் வலப்பக்கமாகப் பெயர்ந்து பொருந்தியும் வருத்தமுற; இறங்கி கிடந்து உடம்பு உழைத்து - இராவணன் தன் ஆசனத்திலிருந்து இறங்கி தரையில் கிடந்து உடம்பு வருந்தி; ஓங்குதீ விடம் பிறந்த கடல் என வெம்பினான் - ஓங்கிய கொடுமையுடைய நஞ்சு தோன்றிய கடல்போல வெதும்பினான்.
இராவணன் தரையில் கிடந்து வருந்தும்போது இடப்பக்கமும் வலப்பக்கமுமாக உருண்டு புரண்டான். அங்ஙனம் அவன் புரளும் போது பூமியும் அதனைத் தாங்கியுள்ள ஆதிசேடனும் அவன் புரளுதற்கேற்ப இடப்பக்கமும் வலப்பக்கமுமாகச் சாய்ந்து நிலை கெட்டு வருந்தின என்பதாம். நஞ்சு தோன்றிய கடல் அந்நஞ்சினால் வெதும்பியது போல இராவணன் தன்னிடத்துத் தோன்றிய புத்திர சோகத்தினால் வெதும்பினான் என்றார்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The serpent with shining hoods and the earth were shifted
- now to the left and swung to the right and were distressed,
- as he came down and lay there, his body in torment, and he seethed
- like the sea in which the fierce, towering poison was born.
What the poem says
Irāvaṇaṉ falls from his throne and rolls on the ground in agony. His thrashing is so violent that the earth, and Ātiśeṣaṉ, the serpent who holds it up, tilt left and right with him. He burns inside like the ocean of milk when the deadly poison rose from it at the churning: the grief for his son was born within him and scalds him as that poison scalded the sea.