கம்பராமாயணம் 9246 · யுத்த 28.8
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
1திருகு வெஞ்சினத் தீநிகர் சீற்றமும்
பெருகு காதலும் துன்பும் பிறழ்ந்திட
இருபது என்னும் எரிபுரை கண்களும்;
உருகு செம்பு என ஓடியது ஊற்றும்நீர்.
பொருள் · Meaning in Tamil
திருகுவெஞ்சினத்தீ நிகர் சீற்றமும் - (பகைவர் மேலெழுந்த) மாறுபட்ட கொடிய சினம் என்று சொல்லப்படுகின்ற தீயை ஒத்த சீற்றமும்; பெருகு காதலும், துன்பும் பிறழ்ந்திட - (மகன் மேல்) பெருகுகின்ற அன்பும் (அவன் இறந்தமையால்) துன்பமும் மாறி மாறித் தோன்றுதலால், இருபது என்னும் எரிபுரை கண்களும் - இராவணனுடைய தீயை ஒத்த இருபது என்ற எண்ணிக்கையை உடைய கண்களும், ஊற்று நீர் உருகு செம்பு என ஓடியது - ஊற்றுகின்ற துன்பக் கண்ணீர் உருகிய செம்பு போலப் பெருகி ஓடியது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- As fury like the fire of twisted, cruel wrath,
- swelling love and sorrow churned in turn,
- from the eyes, twenty of them, like burning flames,
- the welling water flowed like molten copper.
What the poem says
Rage against his enemies, love for his son and grief at his death take turns in Irāvaṇaṉ's heart. From his twenty fiery eyes the tears pour out like molten copper, hot and red.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1tiruku veñ ciṉat tī nikar cīṟṟamum
peruku kātalum tuṉpum piṟaḻntiṭa
irupatu eṉṉum eri purai kaṇkaḷum;
uruku cempu eṉa ōṭiyatu ūṟṟu nīr.