கம்பராமாயணம் 9248 · யுத்த 28.10

Section யுத்த காண்டம் / 28. இராவணன் சோகப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1'மைந்தவோ! 'எனும் : மாமகனே! 'எனும்;
'எந்தையோ! 'எனும் 'என் உயிரே! 'எனும்
'உந்தினேன் உனை யான் உளனே 'எனும்
வெந்த புண்ணிடை வேல்பட்ட வெம்மையான்.

பொருள் · Meaning in Tamil

வெந்த புண்ணிடை வேல் பட்ட வெம்மையான் - வெந்த புண்ணில் வேல் பட்டாற் போன்ற கொடுந்துன்பத்தை அடைந்தவனான இராவணன்; 'மைந்தவோ!' எனும் 'மாமகனே!' எனும் - 'மைந்தா ஓ!' என்பான்; சிறந்த மகனே! என்பான்; 'எந்தையோ!' எனும்; 'என் உயிரே!' எனும் - 'என் அப்பா ஓ!' என்பான்; 'என் உயிரே!' என்பான்; 'உனை முந்தினேன்; நான் உளனோ!' எனும் - 'உனக்கு முன்னர் உயிர் விட வேண்டியவனாகிய நான் இன்னும் இருக்கின்றேனே' என்பான்.

கும்பகருணனை இழந்த துன்பம் வெந்தபுண் போன்றது எனவும், இந்திரசித்தனை இழந்த துன்பம் அப்புண்ணில் வேல் நுழைந்தது போன்றதெனவும் கொள்க. 'ஓ' என்பது இரக்கக் குறிப்புணர்த்தும் இடைச் சொல். மகனை எந்தை என்பது அன்பு பற்றி வந்த வழுவமைதி.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "O my son!" he cries; "O great son!" he cries;
  2. "O my father!" he cries; "O my life!" he cries;
  3. "I should have gone before you; am I still alive?" he cries,
  4. he whose pain was that of a spear thrust into a burnt wound.

What the poem says

Irāvaṇaṉ's lament. He has already lost his brother Kumpakaruṇaṉ, and that loss was like a burn; Intiracittu's death is a spear driven into the burn. He calls his son "my father", an endearment that grammarians allow when love breaks the usual rules, and despairs that he, who should have died first, is still alive.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'maintavō! 'eṉum: mā makaṉē! 'eṉum;
'entaiyō! 'eṉum 'eṉ uyirē! 'eṉum
'muntiṉēṉ uṉai nāṉ uḷaṉō 'eṉum
venta puṇṇiṭai vēl paṭṭa vemmaiyāṉ.