கம்பராமாயணம் 9249 · யுத்த 28.11
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
புரந்தரன் பகை போயிற்று அன்றோ!' எனும் - 'இந்திரனது பகை போயிற்று அல்லவோ!' என்பான்; 'அரந்தை வானவர் ஆர்த்தனரோ!' எனும் - (நம்மால்) துன்பமடைந்த தேவர்கள் (துன்பம் நீங்கி மகிழ்ச்சியால்) ஆரவாரித்தனரோ?' என்பான்; 'கரந்தை சூடியும் பாற்கடல் கள்வனும் - 'கரந்தையைச் சூடிய சிவனும் பாற்கடலில் ஒளிந்துகொண்டுள்ள திருமாலும்; நிரந்தரம் பகை நீங்கினரோ!' எனும் - நிரந்தரமாகத் தம் பகை நீங்கப் பெற்றனரோ?' என்பான்.
அரந்தை - துன்பம், கரந்தை - கரந்தை மலர் திருநீற்றுப்பச்சை நிரந்தரம் - இனி எப்பொழுதும், இந்திரன், சிவன், திருமால் என்போர் இந்திரசித்தனுக்கு அஞ்சி அடங்கி இருந்தவர் இனி அச்சம் தீர்ந்து மகிழ்வர் என்றவாறு.
ஆங்கிலம் · English translationAI
Translation
- "Intiraṉ's enemy is gone, is he not!" he cries;
- "Have the suffering gods roared for joy?" he cries;
- "He who wears karantai and the thief of the milk ocean,
- are they rid of their enemy for ever?" he cries.
What the poem says
Irāvaṇaṉ pictures the gods' delight. Intiraṉ has lost his conqueror; the gods whom the demons oppressed are cheering; even Civaṉ, who wears karantai (sacred basil) flowers, and Tirumāl, who hides in the ocean of milk, are freed for good from the enemy they feared.