கம்பராமாயணம் 9251 · யுத்த 28.13
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
வானவர் ஈட்டமும் வானமானமும் - தேவர்களின் கூட்டமும் அவர்கள் ஏறிச் செல்லுதற்குரிய வானவிமானமும்; போன போன திசை இடம் புக்கன - (இந்திரசித்தின் முன்னிற்கவியலாது) போன போன திசையிடங்களில் புகுந்தனவாய் மறைந்திருந்து; தானம் ஆனவை சார்கில சார்குவது - தம் இருப்பிடத்தை இதுகாறும் சேர்ந்தில, அவை மீண்டும் சேர்வது; ஊன மானிடர் வென்றி கொண்டோ?' எனும் - குறைபாடுடைய மனிதர்களின் வெற்றியைத் துணையாகக்கொண்டு தானோ? என்பான்.
மானம் - விமானம் என்பதன் முதற்குறை. 'ஈட்டம்' என்னும் அஃறிணை 'சார்கில' என்னும் அஃறிணை முடிவு கொண்டது. தானம் - ஸ்தானம் அவரவர் இருப்பிடமாம். உயர்வுடைய தேவர்கள் குறைபாடுடைய மனிதர்கள் பெற்ற வெற்றியைத் துணையாகக் கொண்டு தத்தம் தானத்தை அடைவது பெருமைக்குரியதாயிற்றோ? என்றவாறு.
ஆங்கிலம் · English translationAI
Translation
- "The sky-chariots and the hosts of the gods
- went off into whatever direction they fled to;
- they did not come back to their stations; and will they return now
- on the strength of a victory won by flawed mortals?" he says.
What the poem says
Irāvaṇaṉ scorns the gods. Afraid of Intiracittu, they and their flying chariots scattered to the ends of the sky and never dared go home. Now they will return to their places, but only thanks to a victory won by mere imperfect humans. Is that any honour for gods?