கம்பராமாயணம் 9252 · யுத்த 28.14

Section யுத்த காண்டம் / 28. இராவணன் சோகப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1'கெட்ட தூதர் கிளத்தினர் பொய்; ஒரு
கட்ட மானிடன் கொல்ல என்காதலன்
பட்டு ஒழிந்தனனே? 'எனும்; பன்முறை
விட்டு அழைக்கும் உழைக்கும் வெதும்புமால்.

பொருள் · Meaning in Tamil

கெட்ட தூதர் கிளத்தினவாறு - கொடிய தூதர்கள் கூறியவாறு; ஒரு கட்ட மானிடன் கொல்ல - ஒரு வருந்துந் தன்மையை உடைய மனிதன் கொல்ல; என் காதலன் பட்டு ஒழிந்தனனே' எனும் - என் அன்புக்குரிய மகன் இறந்து பட்டனனே!' என்பான்; பலமுறை விட்டு அழைக்கும் உழைக்கும் வெதும்புமால் - பலமுறை 'மகனே! மகனே!' என்று குரல் விட்டு அழைப்பான்; (அவன் வாராமையால்) வருந்துவான்; பின் மனம் வெதும்புவான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "As the wretched messengers have told it, slain by one
  2. miserable human, my beloved son
  3. has perished and is gone?" he says; many times
  4. he cries out and calls, and suffers, and burns inside.

What the poem says

Irāvaṇaṉ cannot believe it: can his son really have been killed by one wretched man, as the messengers say? Again and again he calls out his son's name; when no answer comes he suffers and burns with grief.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'keṭṭa tūtar kiḷattiṉavāṟu; oru
kaṭṭa māṉiṭaṉ kolla eṉ kātalaṉ
paṭṭu oḻintaṉaṉē? 'eṉum; pal muṟai
viṭṭu aḻaikkum uḻaikkum vetumpumāl.