கம்பராமாயணம் 9253 · யுத்த 28.15
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
எழும்; இருக்கும்; இரைக்கும்; இரக்கம் உற்று அழும் - (துன்ப மிகுதியால் இராவணன் எழுவான். பிறகு தரையில் இருப்பான்; பெருமூச்சு விடுவான், இரக்கமிக்கு அழுவான்; அரற்றும்; அயர்க்கும்; வியர்க்கும்; போய் விழும் - வாய் திறந்து அரற்றுவான்; சோர்வுறுவான்; வியர்ப்பான்; சிறிது நடந்து விழுவான்; விழிக்கும்; முகிழ்க்கும்; தன் மேனியால் நிலத்தை உழும்; உருளும்; புரளுமால் - (பேதலித்து ஒன்றும் தோன்றாமல்) கண்களை விழிப்பான்; பின்பு மூடுவான், தன் உடம்பினால் நிலத்தை உழுவான்; பின்பு தரையில் உருண்டு செல்வான், மீண்டும் புரண்டு வருவான்.
இரைத்தல் - பெருமூச்சு விடுதல், அயர்த்தல் - சோர்தல், முகிழ்த்தல் - கண்களை மூடுதல், கலப்பையால் நிலத்தை உழுவது போலத் துன்ப மிகுதியால் இராவணன் தன் உடம்பால் நிலத்தை உழுவான் போல் இயங்கத் துன்புற்றான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- He rises; he sits; he gasps; overcome with pity
- he weeps; he wails; he grows faint; he sweats; he goes
- and falls; he opens his eyes; he shuts them; with his body
- he ploughs the ground; he rolls; he tosses over.
What the poem says
A verse made almost entirely of verbs, conveying the restless frenzy of Irāvaṇaṉ's grief: he cannot stay in any one state for a moment. His body dragging across the earth is compared to a plough furrowing a field.