கம்பராமாயணம் 9255 · யுத்த 28.17
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
ஓர் தலை; 'எழுவின் கோலம் எழுதிய தோள்களால் - இராவணனது ஒருதலை "சந்தனக்கோலம் எழுதிய இரும்புத்தூண் போன்ற தோள்களால்; 'தழுவிக் கொள்கலையோ!' எனும் - தழுவிக்கொள்ள மாட்டாயோ?” என்று சொல்லும்; ஓர் தலை, 'செழு வில் சேவகனே! 'உழுவைப் போத்தை - மற்றொரு தலை 'செழுமையான வில்லேந்திய வீரனே! ஆண்புலியை; உழை உயிர் உண்பதே!' எனும் - பெண்மான் உயிர் வாங்குவதோ?' என்று சொல்லும்.
எழு - இரும்புத்தூண். உழுவைப் போத்து - ஆண்புலி. உழை - பெண்மான். ஆடவர் தோளுக்கு எழு - 'எழுவுறழ் திணிதோள்' (பெருங் 2, 6, 131) தோளில் எழுதுதல்; 'எழிற்றோள் எழுதி' (பெருங், 1, 34, 201) வீரனுக்குப் புலிப்போத்து; 'புலிப்போத்தன்ன புல்லணற்காளை' (பெரும்பான். 138) 'வயப்புலிப் போத்தன்னார்' (பெரி. ஏனாதி 13) புலிப்போத்து, 'பொறி வரியிடும் புலிப்போத்து நவ்வி வெரீஇ' (பெருங், 1, 54, 37)
ஆங்கிலம் · English translationAI
Translation
- "With those shoulders like iron pillars, painted with designs,
- will you not embrace me?" says one head;
- "That a doe should take the life of a male tiger!
- O warrior with the rich bow!" says another head.
What the poem says
Two more heads speak. One begs his son to hug him with his pillar-like shoulders, decorated with sandal-paste designs as heroes' shoulders were. The other cannot accept that his tiger of a son was killed by a mere doe, meaning a feeble human. The commentary gives parallels from Peruṅkatai and other works for the iron-pillar shoulder, painted shoulders and the hero as a male tiger.