கம்பராமாயணம் 9259 · யுத்த 28.21

Section யுத்த காண்டம் / 28. இராவணன் சோகப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

மற்று ஓர் தலை - மற்று ஒரு தலை; வீர! சேல் இயல் கண் இயக்கர் தம் தேவிமார் - 'வீரனே! சேல் மீனை ஒத்த கண்களை உடைய இயக்கர் தம் மனைவியர்; நின் கோலவில் குரல் கேட்டுக் குலுங்கி - நினது அழகிய வில்லின் நாண் ஒலி கேட்டு நடுங்கி; தம்தாலியைத் தொடல் மேல் இனித் தவிர்கிற்பர் கொல்' என்னும் - தத்தம் தாலியைத் தொட்டுப் பார்த்துக்கொள்ளும் இயல்பை இனிமேல் நீங்குவார்களோ?' என்று சொல்லும்.

இந்திரசித்து வாழ்ந்த காலத்தில் அவனது வில் நாணின் ஒலி கேட்டு இயக்க மாதர்கள் தம் கணவர் உயிர்க்கு ஊறு வந்ததாக நடுங்கித் தத்தம் தாலியைத் தொட்டு அறுந்து போய்விடுமோ என நடுங்கி நிற்பர் 'இனி அங்ஙனம் அவர்கள் நடுங்குதல் ஒழிவார்களோ?' எனத் தன் மகனது பகை நடுக்கும் ஆற்றலை நினைத்து இரங்கியவாறு.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "The queens of the Iyakkar, with eyes like the cēl fish,
  2. will they now stop, O hero, from shaking
  3. when they hear the twang of your fine bow,
  4. and touching their marriage threads?" says another head.

What the poem says

While Intiracittu lived, the wives of the Iyakkar (Yakṣas, a race of demigods) would tremble at the twang of his bowstring and touch their tāli, the marriage pendant, fearing that their husbands were about to die. Will they stop now? Irāvaṇaṉ mourns the terror his son once spread.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'cēl iyal kaṇ iyakkartam tēvimār
mēl iṉit tavirkiṟparkol vīra! niṉ
kōla vil kural kēṭṭuk kuluṅkit tam
tāliyait toṭal? 'eṉṉum maṟṟu ōr talai.