கம்பராமாயணம் 9261 · யுத்த 28.23
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
இன்னவாறு அழைத்து ஏங்குகின்றான் எழுந்து - இவ்வாறு இந்திரசித்தனை அழைத்து ஏங்குகின்ற இராவணன் எழுந்து; உன்னும் மாத்திரத்து ஓடினன் - நினைக்கும் அளவில் ஓடிச்சென்று; ஊழிநாள் பொன்னின் வான் அன்ன போர்க்களம் - ஊழி இறுதியில் தோன்றும் பொன்னிறமுடைய செவ்வானம் போன்று குருதியால் சிவந்து காட்டும் போர்க்களத்தில்; தனது நன்மகன் ஆக்கையை நாடுவான் புக்கனன் - தனது சிறந்த புதல்வனுடைய உடம்பைத் தேடுவதற்காகப் புகுந்தான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Crying out like this and moaning, he rose,
- and in the time it takes to think, he ran and entered the battlefield,
- which looked like the golden sky at the end of an age,
- searching for the body of his good son.
What the poem says
Irāvaṇaṉ rushes out to the battlefield himself to look for his son's body. The field, red with blood, looks like the fiery golden-red sky at the dissolution of the world.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1iṉṉavāṟu aḻaittu ēṅkukiṉṟāṉ eḻuntu
uṉṉum māttirattu ōṭiṉaṉ ūḻi nāḷ
poṉṉiṉ vāṉ aṉṉa pōrkkaḷam pukkaṉaṉ.
naṉ makaṉtaṉatu ākkaiyai nāṭuvāṉ.