கம்பராமாயணம் 9263 · யுத்த 28.25
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
1அழுதவால் சில; அன்பின போன்று அடி
தொழுதவால் சில; தூங்கினவால் சில;
உழுத ஆனைப் பிணம் புக்கு ஒளித்தவால்
கழுதும் புள்ளும் அரக்கனைக் காண்டலும்.
பொருள் · Meaning in Tamil
கழுதும் புள்ளும் அரக்கனைக் காண்டலும் - (போர்க்களத்தில் பிணங்களைத் தின்று கொண்டிருந்த) பேய்களும் கழுகு முதலிய பறவைகளும் இராவணனைக் கண்டவுடனே; சில அழுத, சில அன்பின போன்று அடி தொழுத - அஞ்சிச் சில அழுதன, சில அவன்பால் அன்பு கொண்டவை போலத் தொழுதன; சில தூங்கின உழுத யானைப் பிணம்புக்கு ஒளித்த - (பொய்யாகச் சில தூங்கின (சில) ஆனைப் பிணங்களைத் தலையால் உழுது வழி செய்து கொண்டு புகுந்து ஒளிந்து கொண்டன.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Some wept; some, as if full of love, worshipped
- his feet; some pretended to sleep;
- some ploughed into elephant corpses and hid there,
- the ghouls and the birds, the moment they saw the demon king.
What the poem says
The ghouls and carrion birds feasting on the battlefield panic at the sight of Irāvaṇaṉ. Some burst into tears of fright, some fall at his feet as though devoted to him, some play dead, and some burrow head-first into dead elephants to hide.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1aḻutavāl cila; aṉpiṉa pōṉṟu aṭi
toḻutavāl cila; tūṅkiṉavāl cila;
uḻuta yāṉaip piṇam pukku oḷittavāl
kaḻutum puḷḷum arakkaṉaik kāṇṭalum.