கம்பராமாயணம் 9266 · யுத்த 28.28
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
பொங்கு தோள்வளையும் கணைப்புட்டிலோடு - ஒளி விளங்குகின்ற தோள் வளையும் அம்புப் புட்டிலோடு; அங்கதங்களும் அம்பும் இலங்க - வாகுவலயங்களும் அம்பும் விளங்கிட; வெங்கண் நாகம் எனப் பொலிவெய்யகை - கொடுங்கண்ணையுடைய நாகம் போலப் பொலிகின்ற இந்திரசித்தின் விரும்பத்தக்க கையை; செங்கையால் எடுத்தான், சிரம் சேர்த்தினான் - இராவணன் தன் சிவந்த கையால் எடுத்துத் தலைமேல் வைத்துக் கொண்டான்.
அங்கதம் - வாகுவலயம். கொடுமையும் வடிவும் தோன்ற இந்திரசித்தின் கையினுக்கு வெங்கண் நாகம் உவமை கூறப்பெற்றது. புத்திர பாசத்தால் துடிக்கும் இராவணன் இந்திரசித்தின் கையினைக் கண்டவுடன் பேரன்பின் காரணமாக அதனை ஒரு புனிதப் பொருளினைப் போலச் சிரமிசை வைத்துக் கொள்ளுகின்றான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- With its gleaming shoulder-ring, its quiver of arrows,
- its armlets and its arrows all shining,
- that fearsome arm, splendid as a fierce-eyed cobra,
- he lifted in his red hand and placed it on his head.
What the poem says
Irāvaṇaṉ picks up his son's severed arm, still decked with its armlets and quiver, which looks like a deadly cobra in its strength and shape. Out of love he places it on his head, as one honours a sacred object.