கம்பராமாயணம் 9268 · யுத்த 28.30
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
கை கண்டான் - இந்திரசித்தனின் கையைக் கண்ட இராவணன்; பின் கருங்கடல் கண்டென மெய் கண்டான் - பின்பு கருங்கடலைக் கண்டாற் போன்ற அவன் உடம்பினைக் கண்டான்; பெய் கண் தாரை அருவிப் பெருந்திரை - கண்கள் தாரை தாரையாகப் பொழிகின்ற கண்ணீர் அருவியின் பெரிய அலைகள்; மொய் கண்டார் திரை வேலையை மூடவே - வலிமை கொண்டு ஆரவாரிக்கின்ற அலைகளோடு கூடிய கடலையும் சென்று மூடுமாறு; அதன்மேல் விழுந்தான் அரோ! - அழுதுகொண்டு அவ்வுடம்பின் மீது விழுந்தான்.
கைகண்டான் - வினையால் அணையும் பெயர் இங்கு இராவணனை உணர்த்தியது. கருங்கடல் - கருமையும் பரப்பும் பற்றி இந்திரசித்தின் உடம்பிற்கு உவமையாயிற்று. மொய் - வலிமை, ஆர்திரை - வினைத்தொகை. அரோ - அசை.
ஆங்கிலம் · English translationAI
Translation
- He who had seen the arm then saw, as if seeing the dark sea,
- the body, and fell upon it,
- while the great waves of the torrent streaming from his eyes
- went on to cover even the ocean of mighty, roaring waves.
What the poem says
After the arm, Irāvaṇaṉ finds the headless body, huge and dark as the ocean, and throws himself on it. His tears pour so heavily that their waves seem to flood even the roaring sea.