கம்பராமாயணம் 9270 · யுத்த 28.32
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
மார்பின் பகழியைப் பறிக்கும் - (இந்திரசித்தின் மார்பில் தைத்திருக்கும் அம்புகளை அவன் மார்பிலிருந்து (இராவணன் பறிப்பான்; பல்முறை முறிக்கும்; மூர்ச்சிக்கும்; மோக்கும்; முயங்கும் - அவற்றைப் பல முறை முறிப்பான்; பின்பு மூர்ச்சையுறுவான்; பின் மூக்கில் வைத்து மோந்து பார்ப்பான்; பின் மார்பில் அணைப்பான்; எறிக்கும் வெங்கதிரோடு உலகு ஏழையும் - வெயில் வீசும் வெப்பமுள்ள சூரியனோடு உலகம் ஏழினையும், வாயில் இட்டு இன்று கறிக்கும் எனக் காந்தும் - வாயில் இட்டு இன்று கறிப்போம்' என்று வெகுள்வான்.
இந்திரசித்தின் மார்பில் தைத்திருந்த அம்புகளைப் பறித்தலும், முறித்தலும் செய்தது. அவன் உயிரை வாங்கியதே என்னும் வெறுப்பினாலாம். கறித்தல் - கடித்தல். கறிக்கும் என்பது உம்மீற்றுத் தன்மைப் பன்மை வினைமுற்று. ஆல் - அசைகள்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- He plucks the arrows from the chest; many times
- he snaps them; he swoons; he smells him; he embraces him;
- "The seven worlds, with the sun that pours out its fierce rays,
- we shall put in our mouth and chew today!" he blazes.
What the poem says
Irāvaṇaṉ pulls the arrows out of his son's chest and snaps them, hating them for taking his life. He faints, comes round, smells and hugs the body, then flares into fury, swearing he will chew up the sun and all seven worlds this very day.