கம்பராமாயணம் 9272 · யுத்த 28.34

Section யுத்த காண்டம் / 28. இராவணன் சோகப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1கண்டிலன் தலை; 'காதிய மானிடன்
கொண்டு இறந்தனன் 'என்பது கொண்டவன்
புண் திறந்தன நெஞ்சன் பொருமலன்
விண் திறந்திட விம்மி அரற்றினான்.

பொருள் · Meaning in Tamil

தலை கண்டிலன், காந்தி - (இந்திரசித்தின் கையையும் உடம்பையும் கண்ட இராவணன்) தலையைக் காணாதவனாய் மனம் எரிந்து; அம் மானிடன் கொண்டு இறந்தனன் என்பது கொண்டவன் - அம்மனிதன் (இலக்குவன் எடுத்துச் சென்றனன் என்று அறிந்துகொண்டு; புண்திறந்தன நெஞ்சன் பொருமலன் - புண் திறந்தாற் போன்ற நெஞ்சத்தோடு பொருமுகின்ற இராவணன்; விண்திறந்திட, விம்மி, அரற்றினான் - விண்முகடு பிளக்குமாறு விம்மி விம்மி வாய்திறந்து அரற்றலானான்.

காந்துதல் - சினத்தல், இறத்தல் - கடத்தல். பொருமுதல் - விம்முதல் - துன்பமுறல் எனினுமாம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. He did not see the head; burning, sure that
  2. "that human has carried it off and gone,"
  3. with a heart like a wound torn open, sobbing,
  4. he wailed, heaving, so that the sky split open.

What the poem says

Irāvaṇaṉ finds the body and the arm but not the head, and realises that the human, Ilakkuvaṉ, has taken it away. The thought reopens his wound and he howls loud enough to split the sky.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kaṇṭilaṉ talai; 'kānti am māṉiṭaṉ
koṇṭu iṟantaṉaṉ 'eṉpatu koṇṭavaṉ
puṇ tiṟantaṉa neñcaṉ porumalaṉ
viṇ tiṟantiṭa vimmi araṟṟiṉāṉ.