கம்பராமாயணம் 9275 · யுத்த 28.37

Section யுத்த காண்டம் / 28. இராவணன் சோகப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

பூண்டு, ஒரு பகை மேல் புக்கு - போர்க்கோலம் பூண்டு ஒரு பகை மேல் (இலக்குவன் மேல் போர் செய்ய) புகுந்து; என் புத்திரனோடும் போனார் - என் மகனோடும் (போர்க்களம்) போனவர்களெல்லாம்; மீண்டிலர் விளிந்து வீழ்ந்தார் - மீளாதவர்களாய் இறந்து வீழ்ந்தார்கள்; விரதியர் இருவரோடும் ஆண்டு உள குரங்கும் - தவ விரதம் பூண்ட (இராம இலக்குவராகிய) இருவரோடும் ஆங்கு இருக்கின்ற குரங்கும்; ஒன்றும் அமர்க்களத்து, ஆரும் இன்னும் மாண்டிலர் - பொருந்திய போர்க்களத்தில் யாரும் இன்னும் இறந்திலர்; இராவணன் வீர வாழ்க்கை இனிமற்று உண்டோ? - இராவணனது வீரவாழ்க்கை இனிவேறு உண்டோ?

போர்க்களத்தினின்றும் தப்பியோடிய அரக்கர் உளரேனும், குரங்குகள், மருந்து மலையாலும், தேவர் அருளாலும் அனைத்தும் உயிர்த்தெழுந்தமையை நோக்க இராவணன் தன்னைப் பழித்துக் கூறிக் கொள்ளும் இக்கூற்றின் பொருத்தத்தை உணரலாம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "Those who armed and marched against one foe and went with my son
  2. have not come back; they perished and fell; but of the two ascetics
  3. and the monkeys there with them, on that same battlefield, not one
  4. has died yet; is there any more of Irāvaṇaṉ's heroic life to come?"

What the poem says

Every demon who went out with Intiracittu is dead, yet on the enemy side the two brothers, who live as ascetics, and all their monkeys are still alive. The monkeys killed earlier have been revived, first by the herb-mountain Aṉumaṉ brought and now by the gods' grace. Irāvaṇaṉ sees that his life as a hero is finished.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'pūṇṭu oru pakaimēl pukku, eṉ puttiraṉōṭum pōṉār
mīṇṭilar viḷintu vīḻntār; viratiyar iruvarōṭum
āṇṭu uḷa kuraṅkum, oṉṟum amark kaḷattu, ārum iṉṉum
māṇṭilar; iṉi maṟṟu uṇṭō, irāvaṇaṉ vīra vāḻkkai.